சர்க்கரை நோயாளிகள் க்ரீன் டீ குடிக்கலாமா?
க்ரீன் டீ குடிப்பது உடலுக்கு பலவிதமான நன்மைகளை தருகிறது, இது முக்கியமாக நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.
க்ரீன் டீ குடிப்பது உடலிலுள்ள ரத்த சர்க்கரையின் அளவை குறைத்து கட்டுக்குள் வைத்திருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
தினமும் க்ரீன் டீ சேர்த்துக்கொள்வது ரத்த குளுக்கோஸ் அளவில் குறிப்பிடத்தக்க நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவதாக தெரிகிறது.
கிரீன் டீ சாப்பிடுவது இரத்த குளுக்கோஸை கணிசமாகக் குறைப்பதாக ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.
கிரீன் டீயானது கேமிலியா சினென்சிஸின் என்கிற இலைகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது குறிப்பாக இது ஆசிய நாடுகளில் முக்கிய உணவாகவும் மற்றும் மருத்துவ உணவாகவும் கருதப்படுகிறது.