தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே, அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே..!!!!
லாவெண்டர் எண்ணெயின் வாசனை மன அழுத்தத்தை போக்கி, தூக்கத்தை வரவழைக்கும் திறன் கொண்டது. லாவண்டர் மணம் கொண்ட ரூம் ஸ்பேரேயை பயன்படுத்தலாம். லாவண்டர் எண்ணையை வாங்கி வைத்துக் கொண்டு அதை நுகரலாம்.
மெக்னீசியம் தசைகளை தளர்த்தி மன அழுத்தத்தை குறைக்க பெரிதும் உதவுகிறது. இது நன்றாக தூங்க உதவுகிறது. மெக்னீசியம் அதிகம், உள்ள உணவுகளில் பூசணி விதைகள், கீரை, வேர்க்கடலை, பாதாம் போன்றவை அடங்கும்.
யோகா தூக்கமின்மையை போக்குவதுடன், உங்கள் நினைவாற்றல் மற்றும் செயல்திறனும் மேம்படும். இதன் மூலம் உங்கள் உடலை நன்றாக கட்டுபடுத்தலாம்.
தியானம் போல வேறு எதுவும் உங்களுக்கு உதவ முடியாது. அமைதியான இடத்தைத் தேர்ந்தெடுத்து, அங்கே உட்கார்ந்து உங்கள் சுவாசத்தை உள்ளிழுத்து வெளியேற்றி தியானத்தில் கவனம் செலுத்துங்கள். சுவாசம் சீராக இருக்க வேண்டும், தியானம் செய்யும் போது நேராக உட்கார்ந்திருக்க வேண்டும். இது உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்கும், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் செறிமானம் ஆகியவற்றை மேம்படுத்தும்.
யோகா அல்லது தியானத்தை பயிற்சி செய்ய உங்களுக்கு பொறுமை இல்லாவிட்டால், நீங்கள் உடற்பயிற்சியில் ஈடுபடலாம். 2015 ஆம் ஆண்டின் ஒரு ஆய்வின்படி, ஒவ்வொரு வாரமும் 150 நிமிடங்கள் உடற்பயிற்சியில் ஈடுபடுவது கூட தூக்கமின்மை பிரச்சனையை தீர்க்கும் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.