உடல் எடையை கச்சிதமாய் குறைக்க உதவும் காலை உணவுகள்: மறக்காம சாப்பிடுங்க
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தங்கள் காலை உணவில் அவல் உட்கொள்ளலாம். இது உட்கொள்வதற்கு மிகவும் இலகுவான ஒரு உணவாக இருப்பதோடு, இது மிக எளிதில் ஜீரணமாகின்றது. இதை தயார் செய்யும்போது இதில் பல வகையான காய்களை சேர்த்து இதன் மூலம் கிடைக்கும் ஊட்டச்சத்துகளை இன்னும் மேம்படுத்தலாம்.
முளைகட்டிய பயறு வகைகளை சாட் செய்து சாப்பிடுவது ஒரு சிறந்த காலை உணவாக இருக்கும். வெங்காயம், தக்காளி மற்றும் மசாலாப் பொருட்களுடன் முளைத்த பயறுகளை உட்கொண்டால் உடலுக்கு நார்ச்சத்து, புரதச்சத்து, வைட்டமின்கள் மற்றும் பிற நுண்ணூட்டச்சத்துக்களும் கிடைக்கின்றன. இதனால் எடையும் அதிகரிக்காது.
முறையான காலை உணவுகளை தயார் செய்ய நேரம் இல்லாதவர்கள்ல், காலை உணவாக பால் மற்றும் கார்ன்ஃப்ளேக்ஸ் சாப்பிடலாம். கார்ன்ஃப்ளேக்கில் தியாமின் உள்ளது. இது வளர்சிதை மாற்ற விகிதத்தையும் ஆற்றலையும் அதிகரிக்கிறது. இதனுடன் இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் வயிற்றுக்கு இது நீண்ட நேரம் நிரம்பிய உணர்வை அளிக்கும். இந்த வகையில் இது எடையை குறைக்க உதவுகின்றது.
முட்டை பலர் அதிகமாக விரும்பி உட்கொள்ளும் காலை உணவாக இருக்கின்றது. முட்டை பலருக்கு பிடித்த ஒரு தேர்வாக இருப்பதோடு இதில் பல வித ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன. இது தசைகளை உருவாக்க உதவுகிறது. முட்டை நீண்ட நேரத்திற்கு உடலுக்கு நிரம்பிய உணர்வை அளிக்கின்றது. நாள் முழுதும் நமக்கு தேவையான ஆற்றலையும் இது நமக்கு அளிக்கின்றது.
ஓட்ஸ் ஒரு சிறந்த காலை உணவாக இருக்கும். இதை சீக்கிரம் தயார் செய்து சாப்பிடலாம். ஓட்ஸ் தயார் செய்யும்பொது இதில் பல காய்கறிகளையும் கலந்து செய்யலாம். ஓட்ஸ் நார்ச்சத்து நிறைந்தது. இது மிகவும் ஆரோக்கியமானது. உண்பதற்கு ருசியாக இருப்பதோடு, இதை உட்கொள்வதால், உடலுக்கு நீண்ட நேரம் நிரம்பிய உணர்வு இருக்கும். ஓட்ஸ் சாப்பிடுவது வயிறு, இதயம் ஆகியவற்றை பலப்படுத்துவதோடு இது நீரிழிவு நோயாளிகளுக்கும் நன்மை பயக்கும். இது கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகின்றது.
உடல் எடையை குறைக்க, காலை உணவில் கோதுமை ரவை கஞ்சியை உட்கொள்ளலாம். இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், கஞ்சி சாப்பிட்டால் விரைவில் பசி எடுக்காது. இது உங்கள் உடலுக்கு ஆற்றலை வழங்குவதோடு மட்டுமல்லாமல், வயிறு தொடர்பான பிரச்சனைகளை நீக்கவும் உதவுகிறது.
காலை உணவாக தயிர் சாப்பிடுவதால் எடை இழப்பு தவிர இன்னும் பல வித நன்மைகள் கிடைக்கின்றன என்ற தகவல் சிலரை ஆச்சரியப்படுத்தலாம். ஆனால், இது உண்மை. தயிரில் உள்ள புரோபயாடிக்குகள் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்து எடை இழப்பில் உதவுகின்றன. தினமும் காலையில் ஒரு கப் தயிர் சாப்பிட்டால், உடல் எடை வேகமாக குறைய வாய்ப்புள்ளது.
நார்ச்சத்து, புரதச்சத்தும் வைட்டமின்கள், இரும்புச்சத்து என பல வித ஊட்டச்சத்துகள் நிறைந்த காய்கறிகளின் சாலட்டை காலை உணவாக உட்கொள்ளலாம். இது நாள் முழுதும் உடலை சுறுசுறுப்பாக வைத்திருப்பதுடன், கலோரிகளையும் அதிகரிக்காது. மேலும், இவை ஆரோக்கியமற்ற, தேவையற்ற பசியை குறைக்க உதவும்.
இவற்றுடன் நாள் முழுதும் ஆரோக்கியமான, சமச்சீரான உணவு, தேவையான தூக்கம், தேவையான அளவு உடல் செயல்பாடுகள் ஆகியவையும் உடல் எடையை குறைக்க மிக அவசியம்.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.