Kidney Stones: சிறுநீரக கற்களை உருவாக்கும் சில உணவுகள்... எச்சரிக்கையாக இருங்கள்
)
Foods That Causes Kidney Stones: சிறுநீரகக் கற்களை உருவாக்கும் உணவுகள்: சிறுநீரகத்தில் உள்ள கனிமங்கள் மற்றும் அமில உப்புகளால் ஆன கடினமான பொருட்கள் இணைந்து படிமங்களாக சேர்ந்து சிறிய கற்களாக உருவாகும். இதனால் உடல் ஆரோக்கியத்திற்கு பல வித பாதிப்புகள் ஏற்படும். இந்நிலையில், ஆரோக்கியமான உணவுகள் என்றாலும், அளவிற்கு மிஞ்சினால், சிறுநீரக கற்களை உண்டாக்கக்கூடிய சில உணவுகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.
)
கீரை ஒரு ஊட்டச்சத்து நிறைந்த பச்சை காய்கறி. ஆனால் இதில் மிக அதிக அளவு ஆக்சலேட்டுகள் உள்ளன. சிறுநீரக கற்கள் உருவாக ஆக்சலேட்டுகள் முக்கிய காரணம். கீரையை அளவிற்கு அதிகமாக உட்கொண்டால் சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயம் உள்ளது.
)
பீட்ரூட்களில் ஆக்சலேட்டுகள் நிறைந்துள்ளன. அவற்றை அளவிற்கு அதிகமாக உட்கொள்வது சிறுநீரக கற்கள் அபாயத்தை அதிகரிக்கும். பீட்ரூட்டில், இரும்பு சத்து உட்பட நிறைய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இருந்தாலும், அதிகப்படியான நுகர்வு சிறுநீரகங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
கத்தரிக்காயிலும் ஆக்சலேட்டுகள் அதிக அளவில் உள்ளன. இதனால், கத்திரிக்காயை அதிக அளவில் உட்கொள்வது, சிறுநீரக கற்களின் அபாயத்தை அதிகரிக்கலாம் என்பதால் எச்சரிக்கை தேவை.
தக்காளியிலும் ஆக்சலேட்டுகள் அதிகம் காணப்படுகின்றன. எனவே,, தக்காளியை அதிகமாக உண்ணும்போது அது சிறுநீரக கற்களை ஏற்படுத்தலாம். தக்காளியை அதிகமாக உட்கொள்வது சிறுநீரக பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
பாதாம், பிஸ்தா மற்றும் வாதுமை பருப்பு போன்ற நட்ஸ் வகைகள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். ஆனால் அவற்றில் ஆக்சலேட்டுகளும் உள்ளன. இவற்றை அளவிற்கு அதிகமாக சாப்பிடுவது சிறுநீரக கற்கள் அபாயத்தை அதிகரிக்கும்.
டோஃபு, சோயா பால், சோயா பீன்ஸ் போன்ற சோயா பொருட்களும் சிறுநீரகங்களில் பிரச்சனைகளை உண்டாக்கும். அவற்றில் பைடேட்டுகள் மற்றும் ஆக்சலேட்டுகள் உள்ளன. எனவே. இவற்றை அதிகமாக உட்கொள்வது சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கும்.
டார்க் சாக்லேட் ஆரோக்கியமான உணவாகக் கருதப்படுகிறது. ஆனால் அதில் அதிக அளவு ஆக்சலேட்டுகளும் உள்ளன. அதிகப்படியான சாக்லேட் சாப்பிடுவது சிறுநீரக கற்கள் அபாயத்தை அதிகரிக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.