LDL கொலஸ்ட்ராலை வேகமாய் குறைக்கும் அற்புதமான உணவுகள்: கொழுப்புக்கு குட்பை சொல்லிடலாம்
கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால் அது பல நோய்களுக்கான நுழைவாயிலாக அமைந்து விடுகின்றது. மாரடைப்பு, பக்கவாதம், இதயக் கோளாறுகள் என பலவித பிரச்சனைகள் கொலஸ்ட்ராலால் ஏற்படுகின்றன. ஆகையால் இதை கட்டுக்குள் வைக்க வேண்டியது மிக அவசியமாகும்.
சில எளிய, இயற்கையான வழிகளின் மூலம் கெட்ட கொழுப்பை குறைக்கலாம். நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் சில ஆரோக்கியமான உணவுகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஓட்ஸ் கொலஸ்ட்ரால் நோயாளிகளுக்கு சிறந்த காலை உணவாக கருதப்படுகின்றது. இதில் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது. இதன் மூலம் எல்டிஎல் கொலஸ்ட்ராலை குறைத்து செரிமானத்தை சீராக்க உதவி கிடைக்கிறது. தினமும் ஓட்ஸ் உட்கொள்வது இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
பாதாம், அக்ரூட் பருப்புகள் போன்ற உலர் பழங்களில் நல்ல கொழுப்பும் நார்ச்சத்தும் அதிகமாக உள்ளன. இவை கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைத்து உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் அளிக்கின்றன.
பச்சை பயறு, கொண்டைக்கடலை போன்ற பருப்பு மற்றும் கடலை வகைகளில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இவை கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகின்றன. இதுமட்டுமின்றி உடலுக்கு தேவையான புரதச்சத்தையும் பல்வேறு ஊட்டச்சத்துக்களையும் இவை வழங்குகின்றன.
முழு தானியங்கள்: கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த முயற்சிப்பவர்கள் முழு தானியங்களை உட்கொள்வது நல்லது. இவற்றில் நார்ச்சத்தும், பிற புரதச்சத்துக்களும் அதிகமாக காணப்படுகின்றன. இதன் காரணமாக கெட்ட கொழுப்பு கட்டுக்குள் இருப்பதோடு இதய ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.
அவகேடோவில் மோனோசேசுரேடட் கொழுப்பு மற்றும் நார்ச்சத்து உள்ளது. இதய ஆரோக்கியத்திற்கு இது நல்லது. எல்டிஎல் கொலஸ்ட்ராலை (LDL Cholesterol) குறைத்து நல்ல கொழுப்பான எச்டிஎல் கொலஸ்ட்ராலை (HDL Cholesterol) அதிகரிக்க இது உதவும்.
ஆலிவ் எண்ணெயில் மோனிஷாரேட்டட் கொழுப்புகளும் அதிகமாக உள்ளன. பல ஆய்வுகளில் ஆலிவ் எண்ணெய் மூலம் சமைப்பதால் நல்ல கொழுப்பு அதிகரித்து கெட்ட கொழுப்பு குறைவதாக தெரிய வந்துள்ளது. இதில் இன்னும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.