கெட்ட கொழுப்பை விரட்டி அடிக்க, இந்த ஆரோக்கியமான உணவுகள் உதவும்
பழங்களில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை மற்றும் மாதுளை போன்ற பழங்கள் கொழுப்பைக் குறைக்க உதவுகின்றன. இவை உடலின் ஆற்றலை அதிகரிப்பதோடு ஹீமோக்ளோபின் அளவையும் அதிகரிக்கின்றன. ஒட்டுமொத்த உடல் செயல்பாட்டுக்கு பழங்கள் பல விதங்களில் உதவுகின்றன.
பூண்டில் உள்ள அலிசின் என்ற கலவை கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகின்றது. இது இரத்தத்தை மெலிதாக்கவும் உதவுகிறது. பூண்டில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடல் எடையை குறைக்கவும் பூண்டு உதவியாக இருக்கும்.
ஓட்சில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இது உடலின் செரிமான அமைப்பிலிருந்து கொழுப்பை அகற்ற உதவுகிறது. இதன் காரணமாக இரத்த ஓட்டத்தில் உள்ள கொழுப்பின் அளவு குறைகிறது. கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள் காலை உணவாக ஓட்சை உட்கொள்ளலாம்.
அவகேடோவில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இவற்றில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்துள்ளன. இது கெட்ட கொழுப்பைக் (எல்டிஎல்) குறைக்கவும், நல்ல கொழுப்பை (எச்டிஎல்) அதிகரிக்கவும் உதவும்.
சால்மன், கானாங்கெளுத்தி, மத்தி போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் இருக்கின்றன. இவை இரத்த லிப்பிட் ப்ரொஃபைலை மேம்படுத்தவும் ட்ரைகிளிசரைடுகளைக் குறைக்கவும் உதவுகின்றன. உடலில் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க இவற்றை உட்கொள்ளலாம்.
தாவர அடிப்படையிலான பால் கொலஸ்ட்ராலை குறைக்க நல்ல தெர்வாக இருக்கும். சோயா பால் மற்றும் பாதாம் பால் போன்றவை தாவர அடிப்படையிலான பால் வகைகளில் மிக பிரபலமானவை. இவை உணவு கொழுப்பை உறிஞ்சுவதைத் தடுத்து கொழுப்பைக் குறைக்க உதவுகின்றன.
பல உலர் பழங்கள், கொட்டைகள் மற்றும் விதைகளில் ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து மற்றும் ஆண்டிஆக்சிடெண்டுகள் அதிகமாக உள்ளன. இவை உடலில் சேர்ந்துள்ள கொழுப்புகளை குறைக்க உதவுகின்றன. பாதாம், அக்ரூட் பருப்புகள் போன்ற உலர் பழங்களையும் சியா விதைகள் மற்றும் ஆளிவிதைகள் போன்ற விதைகளையும் அவ்வப்போது உட்கொள்ளலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.