Weight Loss Tips: சிக்கென்ற உடலை பெற உதவும்... ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் வகைகள்

Wed, 27 Mar 2024-7:09 pm,

முளை கட்டிய தானியங்கள், புரத சத்து நார்ச்சத்து நிறைந்தது. இதனால் உடல் எடை குறைகிறது, நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது. இரத்த அழுத்தமும் கட்டுக்குள் இருக்கும்.

நிலக்கடலை: நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்த உள்ள எண்ணற்ற ஊட்டசத்துக்கள் நிறைந்த வேக வைத்த நிலக்கடலை உடல் எடை குறைப்பவர்களுக்கான சிறந்த சிற்றுண்டியாகும்.

ஸ்வீட் கார்ன்: மாலை நேர சிற்றுண்டியில், கலோரி அளவி குறைவாக கொண்ட வேகவைத்த ஸ்வீட் கார்னை சாப்பிடலாம். காரமான உணவு வேண்டும் என்றால் சோள சாலட் செய்தும் சாப்பிடலாம்.

மக்கானா: மாலை நேர சிற்றுண்டியில் மக்கானா என்னும் தாமரை விதை உங்களை சுறுசுறுப்பாகவும் ஆற்றலுடனும் வைத்திருக்கும். ஆன்டிஆக்ஸிடன்ட்கள், கால்சியம், நார்ச்சத்து, புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் இதில் காணப்படுகின்றன.

பழங்கள்: மாலை நேர சிற்றுண்டியில் பழங்களை சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகளை பெறலாம். ஜூஸ் அருந்த பிடிக்கும் என்றால் பழங்களின் சாறு அல்லது மில்க் ஷேக் குடிக்கலாம்.

பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link