தொப்பை கொழுப்புக்கு உடனடி தீர்வளிக்கும் சமையலறை மசாலாக்கள்: ட்ரை பண்ணி பாருங்க
உடல் பருமன் பலரை பாடாய் படுத்தும் ஒரு பிரச்சனையாக உள்ளது. உடல் எடையை குறைக்க பலர் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். எனினும், சில எளிய இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம்.
சமையலில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில மசாலாக்கள் ஆயுர்வேதத்தில் கொழுப்பை எரிக்கும் உணவுகளாக குறிப்பிடப்பட்டுள்ளன. உடலில் சேர்ந்துள்ள கூடுதல் கொழுப்பை எரிப்பதோடு மட்டுமல்லாமல் இவை ஹார்மோன் சமநிலை, இன்சுலின் சென்சிடிவிட்டி, கொழுப்பை கரைத்தல் ஆகியவற்றிலும் உதவுகின்றன. உடல் பருமனுக்கு நிவாரணமாக அமையும் அப்படிப்பட்ட மசாலாக்கள் பற்றி இங்கே காணலாம்.
பார்லி: பார்லி பல நோய்களுக்கு நிவாரணம் அளிக்கின்றது. இது உடலில் சேர்ந்துள்ள கூடுதல் கொழுப்பை குறைக்க அருமருந்தாக பயன்படுகிறது. நீரிழிவு நோயாளிகளும் இதை உட்கொள்ளலாம். தொப்பை கொழுப்பை குறைக்கவும் உடல் எடையை குறைக்கவும் பார்லியை உட்கொள்ளலாம்.
தேன்: ஆயுர்வேதத்தில் தேன் ஒரு மருந்தாக கருதப்படுகின்றது. இது கலோரிகளை வேகமாக இருக்கும் ஒரு பொருளாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி இது எளிதில் ஜீரணமாகி சளியையும் குறைக்கும். இது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிக்கின்றது.
வெந்தயம்: வெந்தயத்தில் நார்ச்சத்து அதிமாக உள்ளது. வெந்தயம், வெந்தய பொடி, வெந்தய கீரை என இவை அனைத்தும், உடலுக்கு நிறைவான உணர்வை அளித்து, தொப்பை கொழுப்பை (Belly Fat) கரைத்து உடல் எடையை குறைக்க உதவுகின்றன. இது இரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்கின்றது.
இஞ்சி: இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளன. இது செரிமானத்தை சீராக்குவதோடு வளர்ச்சிதை மாற்றத்தையும் மேம்படுத்துகிறது. இஞ்சி கலோரிகளை வேகமாக எரிக்கும் ஆற்றல் கொண்டது. மேலும், இதய ஆரோக்கியத்திற்கும் இஞ்சி நல்லதாக கருதப்படுகிறது. தினமும் காலையில் இஞ்சி சாறு குடிப்பது கொழுப்பை வேகமாக எரிக்க உதவும்.
நெல்லிக்காய்: நெல்லிக்காய் ஆயுர்வேதத்தில் பல வித ஆரோக்கிய நன்மைகள் அடங்கிய பொக்கிஷமாக பார்க்கப்படுகின்றது. இது உடலில் உள்ள வாதம், பித்தம் மற்றும் கபம் ஆகிய தோஷங்களை சமன் செய்கிறது. இதனால் உடலில் ஆற்றல் அளவு அதிகரிக்கிறது. கலோரிகளை குறைப்பதுடன் நீரிழிவு, முடி உதிர்தல் மற்றும் அமிலத்தன்மை ஆகியவற்றுக்கும் இது நிவாரணம் அளிக்கின்றது.
மஞ்சள்: மஞ்சள் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் வல்லமை கொண்டது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு கலோரிகளை வேகமாக எரிக்கவும் உதவுகிறது. நீரிழிவு நோயாளிகள் கொலஸ்ட்ரால் நோயாளிகள் ஆகியோருக்கும் இது நல்லது. மஞ்சளில் தண்ணீர் பாலில் சேர்த்து குடிப்பதோடு உணவிலும் தாராளமாக பயன்படுத்தலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.