ஓவர் எடை உடனே குறைய இந்த காய்களை சாப்பிடுங்க: தொப்பை கொழுப்பும் காணாமல் போகும்!!
சில எளிய, இயற்கையான வழிகளில் தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்கலாம். அதில் காய்கறிகளும் ஒன்று. காய்கறிகளில் அதிக நார்ச்சத்து உள்ளது. மேலும் இவற்றில் கலோரிகளின் அளவும் மிக குறைவாக உள்ளது. இதனால் எடை இழப்பு முயற்சிகளில் கண்டிப்பாக காய்கறிகளை ஒரு அங்கமாக்க வேண்டும்.
காய்கறிகளில் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆண்டிஆக்சிடெண்டுகள் ஆகியவை அதிகமாக உள்ளன. இவை தொப்பையை குறைத்து உடல் எடையை குறைக்க உதவுகின்றன. தொப்பையை குறைக்க உதவும் ஆரோக்கியமான காய்கள் பற்றி இங்கே காணலாம்.
சுரைக்காய் தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடயை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இதில் கலோரிகள் குறைவாகவும் நீர்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. சுரைக்காய் சாப்பிடுவதால் வயிறு நீண்ட நேரம் நிறைவான உணர்வுடன் இருக்கும். உடல் பருமன் அதிகமாக உள்ளவர்கள் அடிக்கடி சுரைக்காயை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
ப்ரோக்கோலியில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இதன் காரணமாக இதை உட்கொள்வதால் நீண்ட நேரத்திற்கு வயிறு நிரம்பிய உணர்வுடன் இருக்கின்றது. இதனால் தேவையற்ற, ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வது தவிர்க்கப்படுகின்றது. மேலும், இதில் கலோரிகளின் அளவு மிக குறைவாக உள்ளது. இதன் காரணமாக கொழுப்பு எளிதில் எரிகிறது. தொப்பையை குறைக்க, ப்ரோக்கோலியை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
கீரையில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆகியவை அதிகமாக உள்ளன. தினமும் கீரை சாறு அல்லது சூப் செய்து குடித்து வந்தால், தொப்பை கொழுப்பு குறைந்து உடல் எடை குறைவதுடன் உடலுக்கு இரும்புச்சத்தும் கிடைக்கிறது.
வெள்ளரிக்காயில் அதிக அளவில் நீர்ச்சத்து உள்ளது. இது உடலில் உள்ள நச்சுகளை விரயைவாக நீக்க உதவுகின்றது. வெள்ளரியில் நீர்ச்சத்துடன் அதிக நார்ச்சத்தும் உள்ளது. இது எடையைக் குறைக்க மிகவும் உதவியாக இருக்கும். இது தவிர, இதில் கலோரிகள் குறைவாக இருப்பதால், தொப்பை கொழுப்பை குறைக்கவும் இது உதவுகிறது.
பாகற்காயில் பிட்டர் கோர்டோசின் உள்ளது. இது தொப்பை கொழுப்பை குறைக்கவும், உடல் எடையை குறைக்கவும் (Weight Loss) உதவுகிறது. பாகற்காய் சாறில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து குடிக்கலாம். இது எடையை குறைப்பதுடன் இரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்கும்.
குடைமிளகாயில் கேப்சைசின் உள்ளது. இது கொழுப்பை வேகமாக எரிக்க உதவுகிறது. இதுமட்டுமல்லாமல், இது வளர்சிதை மாற்றத்தையும் துரிதப்படுத்துகிறது. ஆகையால் குடைமிளகாய் உட்கொள்வது தொப்பை கொழுப்பை (Belly Fat) குறைக்க உதவுகின்றது. இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறன.
வெள்ளை பூசணிக்காயில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இதில் நீர்ச்சத்தும் மிக அதிகமாக உள்ளது. பூசணிக்காய் கலோரிகளை அதிகரிக்காமல் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்கின்றது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் பூசணி சாறு குடிப்பதால், செரிமானம் சீராகி, நச்சுகள் வெளியேறி உடல் எடை வேகமாக குறையத் தொடங்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.