உங்கள் இதயத்தை என்றும் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும் 7 உணவுகள்
ஒமேகா-3 நிறைந்த உணவுகள்: ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இதயத்திற்கு ஒரு முக்கியமான மற்றும் மிகவும் ஆரோக்கியமான கொழுப்பு அமிலமாகும். இது வீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், தமனிச் சுவர்களைக் குணப்படுத்தவும், எல்.டி.எல்-ஐக் குறைத்து எச்.டி.எல்-ஐ அதிகரிக்கவும் உதவுகிறது. (Image Credit: Freepik)
பீட்ரூட்: பீரூட்டில் அதிக ஆண்டி ஆக்சிடெண்ட் பண்புகள் உள்ளன. இவை இதயம் மற்றும் உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும். (Image Credit: Freepik)
பூண்டு: பூண்டில் அழற்சி எதிர்ப்பு மற்றும் கெட்ட கொழுப்பைக் குறைக்கும் பண்புகள் உள்ளன. இது இயற்கையான வழியில் இரத்தத்தை மெலிதாக்கும் பொருளாகவும் செயல்படுகிறது. (Image Credit: Freepik)
ஆர்கானிக் தேநீர்: அதன் உயர் ஆண்டு ஆக்சிடெண்ட் பண்புகள் இதய பாதுகப்புக்கு மிக நல்லது. இது ஆற்றல்மிக்க கொலஸ்ட்ராலைக் குறைக்கும் பண்புகளைக் கொண்டிருப்பதாகவும், தமனிகளில் பிளேக் உருவாவதைத் தடுப்பதாகவும் ஆராய்ச்சி இப்போது கண்டறிந்துள்ளது. (Image Credit: Freepik)
பழங்கள்: திராட்சை, மாதுளை மற்றும் பெர்ரிகளில் அதிக ஆண்டி ஆக்செடெண்ட் உள்ளடக்கம் உள்ளது. (Image Credit: Freepik)
வைட்டமின் ஈ நிறைந்த உணவுகள்: வீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடவும், செல் பழுதை சரி பார்க்கவும், தமனிகளைக் குணப்படுத்தவும் இவை பயன்படுகின்றன. சிகரெட் மற்றும் தொழில்துறை மாசுபாட்டால் பாதிக்கப்படுபவர்களுக்கு இது அவசியம். எ.கா: சூரியகாந்தி விதைகள், உப்பு சேர்க்காத வேர்க்கடலை, வெண்ணெய், பாதாம் மற்றும் எள். (Image Credit: Freepik)
நல்ல தரமான எண்ணெய்கள்: தேங்காய் எண்ணெய், சுத்தமான A2 பசு நெய் மற்றும் கடுகு எண்ணெய் போன்றவை நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கவும் வீக்கத்தை எதிர்த்துப் போராடவும் உதவுகின்றன. (Image Credit: Freepik)