குண்டான தாய்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் நீண்டகால ஆரோக்கிய பிரச்சனைகள்! பகீர் தகவல்...

Tue, 05 Mar 2024-6:46 am,
maternal obesity

உடல் பருமன் என்பது இன்றைய காலகட்டத்தில் பெரும் ஆரோக்கிய சிக்கலாக மாறிவிட்டது. ஒருவருக்கு ஏற்படும் ஆரோக்கிய சீர்குலைவிற்கு உடல் எடை முக்கியமானதாக இருக்கிறது. உடல் எடை அதிகமாவது உடனடியாக நடைபெற்றாலும், அதை குறைப்பது என்பது கடினமான விஷயமாக இருக்கிறது. அதிலும், கருவுற்ற பெண் குண்டாக இருப்பது அவரது குழந்தைக்கு எந்தவிதமான நோய்களை ஏற்படுத்தும் என்பது அதிர்ச்சியளிக்கிறது

health of pregnant lady

கர்பிணி பெண்களின் உடல் பருமனாக இருப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து பலருக்குத் தெரிந்தாலும், அவை குறுகிய கால சிக்கல் பற்றியதாகவே இருக்கிறது. உடனடி அபாயங்களைத் தவிர, குழந்தைகளுக்கு ஏற்படும் நீண்டகால சுகாதார தாக்கங்கள் என்ன என்பதை தெரிந்துக் கொள்வோம்

pregnant lady

கர்ப்ப காலத்தில் தாயின் உடல் பருமன் என்பது, கருப்பையின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. இதனால், கருவின் வளர்ச்சியில் ஏற்படும் தாக்கம், கருவில் உள்ள குழந்தையின் வளர்சிதை மாற்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் விளைவாக, இன்சுலின் எதிர்ப்பு, நீரிழிவு இருதய நோய்கள் போன்ற நீண்ட கால சுகாதார சிக்கல்கள் ஏற்படலாம்

பல்வேறு உடலியல் செயல்முறைகளை பாதிக்கும் மரபணு மாற்றங்கள் குழந்தையின் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும், உடல் பருமன், வளர்சிதை மாற்றக் கோளாறுகள் மற்றும் நரம்பியல் வளர்ச்சியிலும் பிரச்சனைகள் ஏற்படலாம்

பருமனான தாய்மார்களின் கருவில் இருக்கும் குழந்தையின் உடல் எடை அதிகமாகும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. இதனால் பிறக்கும் குழந்தைகளின் உடல் எடையும் அதிகமாக இருக்கும். இந்த மேக்ரோசோமியா பிரசவத்தை சிக்கலாக்குவது மட்டுமல்லாமல், குழந்தைக்கு வளர்சிதை மாற்ற சிக்கல்கள் மற்றும் உடல் பருமனை ஏற்படுத்துகிறது.

தாயின் உடல் பருமன், பிறந்த குழந்தைகளின் வளர்சிதை மாற்ற நோய்க்குறியின் வளர்ச்சிக்கு பங்களிக்கிறது. இந்த வளர்சிதை மாற்றக் கோளாறுகள் உடல் பருமன், வகை 2 நீரிழிவு நோய்  இருதய நோய்கள் உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்

தாய்வழி உடல் பருமன், உயர்ந்த இரத்த அழுத்தம், டிஸ்லிபிடெமியா மற்றும் எண்டோடெலியல் செயலிழப்பு உள்ளிட்ட இருதய பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.  

அறிவாற்றல் குறைபாடுகள், நடத்தை சீர்குலைவுகள் மற்றும் ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறுகள் உள்ளிட்ட சந்ததியினரின் நரம்பியல் வளர்ச்சி சிக்கல்களுக்கும், தாயின் உடல் பருமன் காரணமாக இருக்கலாம்.  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link