சமீபத்திய படங்களில் வில்லன்களாக ரசிக்க வைத்த ஹீரோக்கள்!
![sjsurya sjsurya](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2021/11/28/204626-sjsuryah.jpg?im=FitAndFill=(500,286))
வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும் 'மாநாடு' படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்திருந்தார். இந்த படத்தில் சிம்புவை காட்டிலும் எஸ்.ஜே.சூர்யாவின் கதாபாத்திரம் அனைவரது மனதிலும் நிலைத்து நின்றது
![natti natti](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2021/11/28/204625-natti.jpg?im=FitAndFill=(500,286))
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் 'கர்ணன்'. இப்படத்தில் நடராஜ் வில்லனாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்
![sjsurya sjsurya](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2021/11/28/204624-nenjam.jpg?im=FitAndFill=(500,286))
செல்வராகவன் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருந்த படம் நெஞ்சம் மறப்பதில்லை. நீண்ட போராட்டங்களுக்கு இப்படம் திரையரங்கில் வெளியானது. இப்படத்தில் எஸ் ஜே சூர்யாவின் வித்தியாசமான நடிப்பு அனைவரையும் ஈர்த்தது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான 'மாஸ்டர்' படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். இவரது இந்த வில்லன் கதாபாத்திரம் பல ரசிகர்களையும் கவர்ந்தது. விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் சண்டைக்காட்சி திரையரங்குகளில் விசில் பறக்க செய்தது