சர்க்கரை நோய் உள்ளவர்கள் தவறாமல் இவற்றை சாப்பிடுங்கள்!
பாதாமில் நார்ச்சத்து, வைட்டமின் ஈ, மெக்னீசியம் மற்றும் வைட்டமின் 12 ஆகியவற்றுடன் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற சிறந்த ஸ்நாக்ஸ் ஆக இருக்கும்.
பிஸ்தா டைப் 2 நீரிழிவு நோய்க்கு சிறந்த பலனை தருகிறது, குறைந்த கிளைசெமிக் குறியீட்டை கொண்டிருக்கும் பிஸ்தா உடலில் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது.
ஒமேகா 3 கொழுப்பு அமிலம் கொண்ட வால்நட் உங்கள் பசியை நிர்வகிக்கவும், ரத்தத்திலுள்ள அதிகப்படியான சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது.
முந்திரி பருப்பில் கொழுப்புசத்து அதிகமாக இருக்கிறது என்றாலும் இவை பெரும்பாலும் நல்ல கொழுப்புகளாக தான் இருக்கின்றது. எனவே நீரிழிவு நோயாளிகள் இதனை அளவோடு சாப்பிட்டு பயன் பெறலாம்.
எளிதில் கிடைக்கக்கூடிய வேர்க்கடலையில் புரதம், கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இவை சர்க்கரை அளவை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.