முதுமையை தடுக்கும் மிளகு.. உடலில் இத்தனை கோளாறுகளை நீக்குமா?
உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு மிளகு ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது. இதனுடைய சிறந்த உறிஞ்சுதல் திறன் கால்சியம் சோடியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவுகின்றன.
கருப்பு மிளகில் ஆன்டி பாக்டீரியல் பண்புகள் நிறைந்துள்ளன. இது தொண்டை வலியிலிருந்து நிவாரணம் பெற பெரிதும் உதவுகிறது.
புதிதாக நுணுக்கிய கருப்பு மிளகு பொடியில் அழற்சி எதிர்ப்பு, ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் பண்புகள் உள்ளன, இவை புற்றுநோயை எதிர்த்து போராட உதவுகின்றன.
கொலஸ்ட்ரால் அதிகரிக்கும்போது இருதய நோய் வருவதற்கான அபாயமும் அதிகரிக்கிறது. உணவில் கருப்பு மிளகு சேர்த்துக் கொள்வது கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.
கருப்பு மிளகு மற்றும் வெந்நீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வதன் மூலம், பிபி கட்டுக்குள் இருக்கும்.
பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.