கொலஸ்ட்ரால் அதிகமா இருக்கா? இந்த மேஜிக் பழங்களை சாப்பிட்டு பாருங்க, உடனே குறையும்

Tue, 27 Dec 2022-6:30 pm,

சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. தீங்கு விளைவிக்கும் எல்டிஎல் கொழுப்பைக் குறைக்கவும், ஆரோக்கியமான கொழுப்பை அதிகரிக்கவும் உதவும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அவற்றில் உள்ளன. வைட்டமின் சி இதய நோய் மற்றும் இரத்த அழுத்தத்தின் அபாயத்தைக் குறைக்கிறது.

அவகேடோ பழத்தில் மோனோஅன்சாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் உள்ளன. அவை இதயத்திற்கு நன்மை பயக்கும். அவகேடோ பழம் உயர் அடர்த்தி கொழுப்புப்புரதம் (HDL) மற்றும் குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரத கொழுப்பு அளவுகள் இரண்டையும் சமப்படுத்த முடியும்.

 

நாவல் பழத்தில் பைட்டோநியூட்ரியண்ட்கள் உள்ளன. அவை உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். மேலும் கொழுப்பையும் கட்டுப்படுத்த இவை உதவுகின்றன. உங்கள் உணவில் நாவல் பழங்களை சேர்ப்பதன் மூலம், உங்கள் உடலின் ஆரோக்கியமான கொலஸ்ட்ராலை அதிகரிக்கலாம்.

வாழைப்பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் பல தாதுக்களுடன் சுக்ரோஸ், பிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் போன்ற சர்க்கரைகள் நிறைந்துள்ளன. இது பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துக்கான நல்ல மூலமாகும். வாழைப்பழம் மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

கரையக்கூடிய நார்ச்சத்து கொண்ட, இதயத்திற்கு ஆரோக்கியமான பழங்கள் அதிக கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும். மருத்துவ அறிவியலின் மொழியில் பெக்டின் எனப்படும் பழங்களில் கரையக்கூடிய நார்ச்சத்தின் அளவு அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் என நம்பப்படுகிறது. 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை.  இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link