உணவில் உப்பு அதிகமாவது தப்பு: நோய் எதிர்ப்பு சக்திக்கு வரலாம் ஆப்பு!!

Tue, 22 Feb 2022-6:54 pm,

உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளார்கள். உணவில் உப்பு குறைந்தாலும் சரி, சிறிய அளவு அதிகரித்தாலும் சரி, அது உணவின் சுவையை கெடுத்து விடும். உப்பு இல்லாத உணவை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. உப்பு உணவின் சுவையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ஆரோக்கியத்துக்கும் பல நன்மைகளை அளிக்கின்றது. எனினும், உப்பை அதிகமாக உட்கொள்வதும் நோய் எதிர்ப்பு சக்திக்கு, ஆபத்தாகிறது என்பதும் தெரிய வந்துள்ளது. 

சயின்ஸ் டிரான்சேஷனல் மெடிசின் குறித்து வெளியிடப்பட்ட புதிய ஆய்வின்படி, ஜெர்மனியில் உள்ள பான் பல்கலைக்கழக மருத்துவமனையின் ஆராய்ச்சியாளர்கள் குழு ஒரு ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வில், உணவில் அதிக உப்பை சேர்ப்பது, நோயெதிர்ப்பு மண்டலத்தின் (Immunity System) உயிரணுக்களின் பாக்டீரியா எதிர்ப்பு செயல்பாட்டை பாதிக்கும் என்று கண்டறியப்பட்டது. இதன் காரணமாக உடலுக்கு ஆபத்தான் பாக்டீரியாக்களை நோயெதிர்ப்பு மண்டலத்தால் அழிக்க முடிவதில்லை. ஈ.கோலை (E.Coli) பாக்டீரியாவால் சிறுநீரக நோய்த்தொற்றுகளும் ஏற்படலாம்.

ஆராய்ச்சியாளர்களின் குழு எலிகளை ஆய்வு செய்ய லிஸ்டீரியா பாக்டீரியாக்களை அவற்றுள் செலுத்தின. அதன்பிறகு பாதிக்கப்பட்ட எலிகளில் எந்த எலிகளுக்கு அதிக உப்பு உள்ள உணவு வழங்கப்பட்டதோ, அவற்றின் நிலைமை மிகவும் சிக்கலாக மாறியது கண்டறியப்பட்டது. அதிகப்படியான உப்பை உட்கொள்வதால் உடலின் நியூட்ரோபில்ஸ் எனப்படும் நோயெதிர்ப்பு உயிரணுக்கள் பலவீனமடைகின்றன. இது முக்கியமாக பாக்டீரிய சிறுநீரக (Kidney) நோய்த்தொற்றுக்கு எதிராக போராட உதவுகிறது.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, பெரியவர்கள் ஒரு நாளைக்கு ஒரு டீஸ்பூன் அல்லது 5 கிராமை விட குறைவான உப்பை உட்கொள்ள வேண்டும். இது ஒரு நிலையான அளவாகும். குழந்தைகளில் இந்த அளவு குறைக்கப்பட வேண்டும். இது தவிர, ஒரு நாளைக்கு உங்களுக்கு தேவையான உப்பின் அளவு உங்கள் உடல் செயல்பாடுகளின் அளவையும் பொறுத்து இருக்கும். இதை அறிய உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link