பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட்டடித்த இந்திய திரைப்படங்கள் 2022: தென்னிந்திய படங்கள் ஆக்ரமிப்பு
பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியான 'கேஜிஎப் 2' திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகி அற்புதமான வரவேற்பைப் பெற்றது. வெற்றியை பெற்ற கேஜிஎப் 2, உலகளவில் 1228.3கோடி ருபாய் வசூல் செய்துள்ளது. இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 150 கோடி ரூபாயாகும்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'பீஸ்ட்' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இது உலகளவில் ரூ.227.3 கோடி வசூல் செய்துள்ளது. இதன் மொத்த பட்ஜெட் 130 கோடி ரூபாயாகும்
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில், ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியான 'ஆர்ஆர்ஆர்' படம் உலகளவில் ரூ.1131.1 கோடி வசூல் செய்துள்ளது. இப்படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.425 கோடி ஆகும்.
லோகேஷ் இயக்கத்தில் கமல், பஹத் பாசில், விஜய் சேதுபதி ஆகியோரது நடிப்பில் வெளியான 'விக்ரம்' படம் ரூ.240.3 கோடி வசூல் செய்தது, இப்படத்தின் மொத்த பட்ஜெட் தொகை ரூ.115 கோடியாகும்.
மார்ச் 14 அன்று திரையரங்குகளில் வெளியான விவேக் அக்னிஹோத்ரியின் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' தொற்றுநோய்க்குப் பிந்தைய வசூல் சாதனைகளையும் தகர்த்தது. காஷ்மீரி பண்டிட்கள் மாநிலத்தில் இருந்து வெளியேறும் பிரச்சனையை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம் பார்வையாளர்களிடமிருந்தும் விமர்சகர்களிடமிருந்தும் ஒரே மாதிரியான விமர்சனங்களைப் பெற்றது.
340.16 கோடியுடன் இப்படம் இந்த வருடத்தின் பாலிவுட் திரைப்படங்களில் அதிக வசூல் சாதனை படைத்துள்ளது. (Photograph:Instagram)
பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்களின் பின்னடைவில் இருக்கும் பாலிவுட் உலகில் 'பூல் புலையா 2' திரைப்படம் ஆறுதல் அளிக்கிறது.
இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ₹252.30 கோடிக்கு மேல் வசூல் செய்து திரையரங்குகளில் தொடர்ந்து நல்ல வியாபாரம் செய்து வருகிறது. இந்திய அளவில் அதிக வசூல் செய்த இரண்டாவது ஹிந்தித் திரைப்படமாகவும் இது மாறியுள்ளது.
(Photograph:Instagram)