நோய்நொடிகளுக்கு எதிரியாகும் பழங்கள்! புரதச்சத்து உள்ள பழங்கள்
நார்ச் சத்து, நீர்ச்சத்து, வைட்டமின் சி என பல சத்துக்கள் நிரம்பிய பழங்கள், பைடோ கெமிக்கல்ஸ் நிரம்பியவை. இதனால் பழங்களைச் சாப்பிடுவதால் நோய் வராமல் தடுக்க முடியும்
கொய்யா பழங்களில் புரதம் அதிகம் உள்ள பழங்களில் ஒன்று. இந்த வெப்பமண்டல பழத்திலும் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. கொய்யாவில் உள்ள விதைகள் மற்றும் தோலையும் சாப்பிடலாம்
ஆரோக்கியமான கொழுப்பு, நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் ஆகியவை கொண்ட அவகேடோ உடலுக்கு மிகவும் நல்லது
பலா, முக்கனிகளில் ஒன்று, இதை பழமாகவும் சாப்பிடலாம், காயாகவும் சமைத்து சாப்பிடலாம். இதில் புரதம் அதிகமாக உள்ளது.
கிவியில் புரதச்சத்து இருக்கிறது. கிவியை அப்படியே சாப்பிடலாம், தோலோடும் சாப்பிடலாம்.
அப்ரிகாட் பழத்தில் புரதச்சத்து அதிகம் உள்ளது
வாழைப்பழங்களில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது, பயணத்தின்போது சாப்பிட வசதியாக உள்ளது. ஒரு நடுத்தர அளவு வாழைப்பழத்தில் 1.3 கிராம் புரதம் உள்ளது.
ஆரஞ்சின் குடும்பத்தை சேர்ந்த பல்வேறு பழங்களிலும் புரதச்சத்து அதிக அளவில் உள்ளது
வைட்டமின் சி இன் மற்றொரு சிறந்த ஆதாரமான ஆரஞ்சு பழத்தை சாறாக மட்டுமல்ல, அப்படியேவும் சாப்பிடலாம்
ஆழமான சிவப்பு நிறத்தில் மட்டுமல்ல, செர்ரிப் பழங்களில் புரதம் உள்ளது.