லியோ to கங்குவா-தமிழ் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்கள்..!

Sat, 16 Sep 2023-6:38 pm,

ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள தென்னிந்திய திரைப்படங்கள். லிஸ்டில் என்னென்ன படங்கள் உள்ளன தெரியுமா..?

தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் இந்த வருட தீபாவளிக்கு வெளியாகிறது. இதை அருண் மாத்தீஸ்வரன் இயக்கியுள்ளார். படத்தின் டீசர் தனுஷின் பிறந்தநாளன்று வெளியாகி ரசிகர்களின் எதிர்பாப்பினை எகிற செய்தது. 

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம், தங்கலான். இதன் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு முடிவடைந்தது. படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது. இதில், மாளவிகா மோகனன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். படம், அடுத்த வருடம் திரைக்கு வர உள்ளது. 

பான் இந்தியா அளவில் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள படம், லியோ. விஜய் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படம், அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சூர்யா ஹீரோவாக நடித்து வரும் கங்குவா படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். படத்தின் க்ளிம்ஸ் வீடியோ சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அரசர் காலத்து கதையாக உருவாகி வரும் இந்த படம், இந்திய அளவில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை தூண்டி உள்ளது. 

1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. ஷங்கர் இயக்கும் இந்த படத்தில் கமல் ஹாசன் உடன் இணைந்து சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம், அடுத்த ஆண்டு வெளியாகிறது. 

கே.ஜி.எஃப் இயக்குநர் பிரசாந்த் நீலின் அடுத்த படைப்பு, சலார். இதில் பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ளார். இது, கே.ஜி.எஃப் யுனிவர்சின் ஒரு படமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. அதனால் இப்படம் மீது தமிழ் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு கூடியுள்ளது. 

புஷ்பா : தி ரைஸ் படத்தின் அடுத்த பாகம், புஷ்பா: தி ரூல். இந்த படம், அடுத்த ஆண்டு ஆக்ஸ்டு மாதம் 15ஆம் தேதி வெளியாகிறது. இதில் பகத் பாசில் வில்லனாக நடித்துள்ளார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ளார். அதுமட்டுமன்றி, புஷ்பா முதல் பாகம் பலரை கவர்ந்ததால் ரசிகர்கள் இரண்டாம் பாகத்தின் ரிலீஸிற்காக காத்துக்கொண்டுள்ளனர். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link