Duleep Trophy: துலிப் டிராபி போட்டிகளை நேரலையில் எங்கு, எப்போது பார்க்கலாம்?
துலிப் டிராபி 2024 (Duleep Trophy 2024) தொடர் மற்ற ஆண்டுகளை விட இந்த முறை அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் பல்வேறு நட்சத்திர வீரர்கள் இதில் விளையாடுகிறார்கள் என்பதால்தான்... அந்த வகையில் 4 அணிகளின் பிளேயிங் லெவன் கணிப்பை முதலில் காணலாம்.
Team A: மயங்க் அகர்வால், கேஎல் ராகுல், சுப்மான் கில் (கேப்டன்), திலக் வர்மா, ரியான் பராக், ஷிவம் துபே, துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), குல்தீப் யாதவ், ஆகாஷ் தீப், ஆவேஷ் கான், கலீல் அகமது
Team B: அபிமன்யு ஈஸ்வரன் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், முஷீர் கான், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), சர்பராஸ் கான், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி, சாய் கிஷோர், யாஷ் தயாள், முகேஷ் குமார்
Team C: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), பாபா இந்திரஜித், சாய் சுதர்சன், அபிஷேக் போரல், ஆர்யன் ஜூயல் (விக்கெட் கீப்பர்), மானவ் சுதர், ஹிருத்திக் ஷோக்கீன், அன்சூல் கம்போஜ், மயங்க் மார்கண்டே, விஜய்குமார் வைஷாக், சந்தீப் வாரியர்
Team D: அதர்வா டைடே, தேவ்தத் படிக்கல், ரிக்கி புய், ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்) யாஷ் துபே, கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், சரண்ஷ் ஜெயின், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, துஷார் தேஷ்பாண்டே.
இதில் முதல் சுற்று போட்டிகள் நாளை (செப். 5) தொடங்குகின்றன. முதல் போட்டியில் Team A vs Team B அணிகள் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மோதுகின்றன.
அதேபோல் Team C vs Team D அணிகள் அனந்தபூரில் ஆந்திரா கிரிக்கெட் அகாடமி கிரிக்கெட் மைதானத்தில் மோதுகின்றன.
இந்த இரு போட்டிகளும் காலை 9.30 மணிக்கு தொடங்கும். நான்கு நாள்கள் நடைபெறும் இந்த போட்டியில் நாளை முதல் நாள் என்பதால் இரு போட்டிகளின் டாஸ் காலை 9 மணிக்கு போடப்படும். இந்த போட்டியை நீங்கள் Sports 18 சேனலில் தொலைக்காட்சியிலும், Jio Cinema செயலியிலும் நேரடி ஒளிபரப்பை பார்க்கலாம்.