Timed Out முறை கொண்டுவர என்ன காரணம்? 106 ஆண்டுகளுக்கு முன் நடந்த போட்டி - வரலாறு இதோ!

Mon, 06 Nov 2023-7:18 pm,

இன்றைய போட்டியில் இலங்கை வீரர் சதீரா சமரவிக்ரம அவுட்டான பின் ஏஞ்சலோ மேத்யூஸ் களமிறங்கினார். இவர் ஹெல்மட் உடைந்திருந்ததால் சற்று நேரம் எடுத்தார். அவர் பந்தை எதிர்கொள்ள அதிக நேரம் எடுப்பதாக ஷகிப் அல் ஹாசன் கள நடுவர் மரைஸ் எராஸ்மஸிடம் முறையிட்டார். 

 

இதில் மேத்யூஸ் பந்தை எதிர்கொள்ள 2 நிமிடத்திற்கும் மேல் நேரம் எடுத்தது உறுதியானதால் அவருக்கு அவுட் கொடுக்கப்பட்டது. அவரது ஹெல்மட் உடைந்திருப்பதை தெரிவிப்பதற்கு முன்னரே அவர் 2 நிமிடத்தை தாண்டிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

 

MCC விதிப்படி (Rule 40.1.1) 3 நிமிடங்களில் பந்தை எதிர்கொள்ள பேட்டர் தயாராக வேண்டும். ஆனால் நடப்பு உலகக் கோப்பை தொடர் விதிப்படி 2 நிமிடங்கள்தான் கொடுக்கப்பட்டுள்ளது. இதனாலேயே அவருக்கு அவுட் கொடுக்கப்பட்டது. 

 

இந்த விதிப்படி சர்வதேச கிரிக்கெட் வீரர் அவுட்டாவது இதுதான் முதல்முறையாகும். ஆனால், 104 ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து கவுண்டியில் ஒரு வீர்ர இப்படி அவுட்டானார். ஆம், 1919ஆம் அண்டில் ஒரே போட்டியில் Timed Out முறையில் ஒரு கவுண்டி வீரர் அவுட்டாகி உள்ளார். 

 

1919ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி டவுன்டன் நகரின் மைதானத்தில் Sussex மற்றும் Somerset கவுண்டி அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், Sussex அணியின் ஹரோல்ட் ஹாகெட்டின் (Harold Haggett) என்ற பேட்டர் உரிய நேரத்தில் களத்திற்கு வராததால் அவருக்கு Timed Out முறையில் அவுட் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

 

ஹரோல்ட் ஹாகெட்டின் காலில் காயம் ஏற்பட்டதால், அவர் கிரிக்கெட் ஜெர்சிக்கு பதிலாக சாதாரண ஆடைகளை அணிந்து ஆடுகளத்தில் நொண்டியபடி வந்து நடுவரிடம் சிறிது நேரம் பேட்டிங் செய்ய வர சற்று நேரம் எடுத்துக்கொள்வதாகக் கூறியிருக்கிறார். ஆனால் நடுவர் அவரது முறையீட்டை ஏற்க மறுத்து அவுட் கொடுத்துவிட்டார். அத்தோடு Sussex அணியின் இன்னிங்ஸ் அங்கு முடிவுக்கு வந்தது. சரியான நேரத்தில் ஆடுகளத்திற்கு வராததால் ஹாகெட்டுக்கு நடுவரால் அவுட் வழங்கப்பட்டாலும், அதுவரை கிரிக்கெட்டில் அப்படியொரு விதி இல்லை.

 

இது பல மாதங்களாக தொடர் சர்ச்சையை கிளப்பிய பின்னரே, இதில் பிரச்னை வருவதை தடுக்க விதி கொண்டுவரப்பட்டது. அதாவது சில காலம் வரை இது நடுவரின் முடிவுக்கு விடப்பட்ட நிலையில், பின்னர் பிரச்னை வராமல் இருக்க அதுகுறித்த விதியை கொண்டு வந்தது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link