Holi 2024 : சென்னையில் எந்தெந்த இடங்களில் ஹோலி கொண்டாடலாம்? முழு லிஸ்ட்!
பிரகலாதனை அவனது தந்தை ஹிரன்யகசிபுவிடம் இருந்து அவனை காப்பாற்றியதை அடுத்து, இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த வருடம், வரும் மார்ச் 25ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
சென்னையை பொறுத்தவரை, வட இந்தியர்கள் அதிகம் தங்கியிருக்கும் இடத்தில்தான் அதிகமாக ஹோலி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், சென்னையின் நார்த் இந்தியன் ஹப்பாக இருப்பது, சௌகார்பேட்டை. இந்த இடத்திற்கு, காலை 6-7 மணி அளவில் சென்றால் சிறப்பாக ஹோலி பண்டிகையை கொண்டாடலாம்.
ராயப்பேட்டையில் உள்ள YMCA மைதானத்தில், ரூ.549 கொடுத்து டிக்கெட் வாங்கினால் ஜாலியாக ஹோலி கொண்டாடலாம். இதற்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் இருக்கிறது.
சென்னை அரும்பாக்கத்திலும் ஹோலி கொண்டாடலாம். இங்கு, ஹோட்டல் ராதா ரெஜெண்ட் எனும் இடத்தில் ரூ.299 டிக்கெட்டிற்கு ஹோலி கொண்டாடப்படுகிறது.
ஹோலி ஹாய் எனும்பெயரில், தி பார்க் ஹோட்டலில் ஹோலி கொண்டாடப்படுகிறது. இதில் டிஜே வைக்கப்பட்டு பாடல்களுக்கு நடனமும் ஆடலாம். இதற்கான டிக்கெட் விலை, ரூ.299.
ஹோலி க்ளவுட்ஸ் என்ற பண்டிகை, சென்னை முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள ஆன்லைனில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கான டிக்கெட்டுகள் ரூ.150ல் இருந்து தொடங்குகிறது.
Balam Pichkari எனும் குழு, சென்னை முழுவதும் ஹோலி பண்டிகையை நடத்துகிறது. இதற்கான டிக்கெட்டுகளையும் ஆன்லைனில் வாங்கி கொள்ளலாம். செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட்டுகளின் விலை, ரூ.699 ஆக உள்ளது.