வீடு வாங்கும் பிளான் உள்ளதா? இந்த தவறுகளை மட்டும் செய்யாதீர்கள்
நீங்கள் வீடு வாங்கும்போது, கூடுதல் கட்டணங்கள் பற்றி உங்களுக்குத் தெரியாவிட்டால், உங்கள் கனவு இல்லத்தை வாங்குவதற்கு நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிக செலவாகலாம். வீடு வாங்கும்போது, தனித்தனியான ஜிஎஸ்டி கட்டணங்கள், பதிவுக் கட்டணம், முத்திரைத் தீர்வை, தரகு, பர்னிஷிங் மற்றும் பிற கட்டணங்கள் விதிக்கப்படலாம். ஆகையால், வீடு போன்ற சொத்துகளில் பணத்தை முதலீடு செய்வதானால், முதலில் அதற்கு ஆகக்கூடிய மொத்தத் தொகையை கணக்கிட வேண்டும்.
ஒரு வீட்டை இறுதி செய்வதற்கு முன்னர், கண்டிப்பாக உங்கள் விருப்பங்களுக்கு ஏற்ற குறைந்தது 10 வீடுகளையாவது பார்த்து, ஒப்பிட்டு, ஆராய்ந்து பின்னர் ஒரு நல்ல வீட்டை இறுதி செய்யுமாறு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இலவச மற்றும் பேராசை கொண்ட சலுகைகளின் வலையில் சிக்க வேண்டாம்.
வீடு வாங்கச் சென்றால், வீட்டின் நான்கு சுவர்கள் பற்றி மட்டும் தெரிந்து கொள்ளாமல், வீட்டில் கிடைக்கும் வசதிகள், தளர்வுகள், தேவைகள், போதிய எண்ணிக்கையில் அறைகள், அவற்றில் போதுமான இடம் மற்றும் இதர சில அம்சங்களைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும் என மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
நீங்கள் ஒரு வீட்டை வாங்கப் போகிறீர்கள் என்றால், தனிப்பட்ட ஆராய்ச்சி செய்வது மிகவும் முக்கியம். விலை மற்றும் இருப்பிட விவரங்கள் பற்றிய ஆய்வுடன் இந்த ஆராய்ச்சியை தொடங்கலாம். மேலும் விற்பனையாளர் யார் என்பதையும், பில்டரின் முந்தை பணிகளை பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
நீங்கள் ஒரு சொத்தை வாங்க கடனுக்கு விண்ணப்பித்தால், கடன் வழங்குபவர் உங்கள் கடன் வரலாற்றை சரிபார்ப்பார். உங்கள் கடன் வரலாற்றில் ஏதேனும் சிக்கல் இருந்தால், அது உங்கள் கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட வழிவகுக்கும். எனவே கடனுக்கு விண்ணப்பிக்கும் முன் உங்கள் கிரெடிட் ஸ்கோரை ஆன்லைனில் சரிபார்ப்பது முக்கியம்.
அதிக விலைக் கடன்களில் 75 சதவிகிதம் அல்லது குறைந்த விலைக் கடன்களில் 90 சதவிகிதம் நிதியளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. கடனின் மீதி தொகையை நீங்கள் கொடுக்க வேண்டும். ஆகையால், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், பட்ஜெட்டில் குறைந்தபட்சம் 20-25 சதவீதத்தை கையில் ரொக்கமாக தயாராக வைத்திருப்பது உங்களுக்கு நன்மை பயக்கும்.