அழகான மிருதுவான உதடுகள் வேண்டுமா? இதோ எளிய வழி!!
உதடுகளின் கருமை மற்றும் வறட்சி போன்ற பிரச்சனைகளால் நீங்கள் அவதியில் இருந்தால், சில வீட்டு வைத்தியங்களை பயன்படுத்தி இந்த பிரச்சனையிலிருந்து எளிதாக விடை பெறலாம். உதடுகளின் கருமையை நீக்குவது எப்படி என்பதை இந்த பதிவில் காணலாம்.
உதடுகளின் கருமையை போக்க தேன் மற்றும் எலுமிச்சையை பயன்படுத்துவது சிறந்ததாக கருதப்படுகிறது. தேன் மற்றும் எலுமிச்சையில் ஒளிரும் பொருட்கள் உள்ளன. அவை உதடுகளில் தடவப்பட்டால், உதடுகளை உள்ளிருந்து இளஞ்சிவப்பு நிறமாக மாற்றும். மேலும், தேன் உதடுகளை ஆழமாக ஈரப்பதமாக்குவதில் பயனுள்ளதாக இருக்கும். உதடுகளின் கருமை நீங்க, தேன் மற்றும் எலுமிச்சையை வாரத்திற்கு மூன்று முறை உதடுகளில் தடவவும்.
கற்றாழை மற்றும் தேன் கொண்டு தயாரிக்கப்படும் லிப் பேக் இந்த பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வாக இருக்கும். இதனால் உதடுகள் எப்போதும் அழகாகவும் மென்மையாகவும் இருக்கும். இதைத் தயாரிக்க, முதலில் நீங்கள் கற்றாழை ஜெல்லை எடுத்து, அதில் சிறிது தேன் கலக்கவும். இந்த கலவையை உங்கள் உதடுகளில் 20 நிமிடங்கள் தடவவும். இப்படி செய்வதால் உதடுகள் இளஞ்சிவப்பு நிறமாக மாறும். இந்த பேக்கை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தலாம்.
உதடுகளை இளஞ்சிவப்பு நிறத்தில் வைத்திருக்க ரோஜா இதழ்கள் உதவும். உதடுகளில் ரோஜா இதழ்களை உதட்டில் பூச முதலில் நன்றாக அரைத்து அதில் எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து, இந்த பேஸ்ட்டை தினமும் இரவில் தூங்கும் முன் உதடுகளில் தடவவும். இப்படி செய்வதால் உதடுகளின் கருமை நீங்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)