Horoscope 2022: மகிழ்ச்சியின் உச்சத்தை தொடப்போகும் `5` ராசிக்காரர்கள்!

Sun, 19 Dec 2021-4:21 pm,

கடக ராசிக்காரர்களின் காதல் மற்றும் திருமண வாழ்க்கைக்கு 2022 ஆம் ஆண்டு சிறப்பானதாக இருக்கும். இவர்களுக்கு வாழ்க்கைத்துணை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். முதல் மூன்று மாதங்களுக்குப் பிறகு அவர்கள் எப்போது வேண்டுமானாலும் மூன்று முடிச்சுப் போடலாம். அதைவிட சந்தோஷம் என்னவெனில், அவர்களுக்கு மனதிற்கு பிடித்தமான வாழ்க்கைத் துணை கிடைப்பதுதான்.

2022ல் சிம்ம ராசிக்காரர்களின் வாழ்வில் துணையின் பிரவேசம் நிச்சயம். இவர்கள் ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு திருமணம் நிச்சயம் கை கூடும்.

கன்னி ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை துணை தேடல் இந்த ஆண்டு முடிவடையும். மனதிற்கு பிடித்தவர்கள் திருமணம் செய்ய நேரம் கை கூடும்.

2022-ம் ஆண்டு விருச்சிக ராசிக்காரர்களுக்கு பொருத்தமான துணை கிடைத்து வாழ்க்கை பயணம் இனிமையாக தொடங்கும்.

ஏப்ரலில் நடக்கவிருக்கும் வியாழன் பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். அதனால்,  திருமணம் நிச்சயம் கை கூடும். இத்துடன் குருவின் அருளால் திருமண வாழ்க்கையும் சிறப்பாக அமையும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link