புத்திசாலித்தனத்தால் அனைவரையும் கவரும் 5 ராசிகள்! ‘இந்த’ ராசிக்காரர்களிடம் அப்படி என்ன ஸ்பெஷல்??

Tue, 06 Aug 2024-7:07 pm,
Intelligent Zodiac Signs

எல்லா ராசிக்காரர்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சிந்திக்கும் திறன், தைரியம், பேச்சுவன்மை, கலை ஆர்வம் என ஒவ்வொருவரும் வித்தியாசமானவர்கள். சிலரின் திறன் குடத்தில் இட்ட விளக்காய் வெளியில் தெரியாமல் இருக்கும். இதுபோன்ற பல பொதுப்படையான விஷயங்களை ராசியின் அடிப்படையில் பிரிக்கலாம்

Horoscope

ஒருவரின் ஜாதகம் என்பது, அவருடைய வாழ்நாள் முழுவதும் எப்படிப்பட்ட சூழலில் இருப்பார், மனநிலை எப்படி இருக்கும், தோற்றம் என பொதுவான பல விஷயங்களை குறிப்பால் உணர்த்தும். 

Spritual

ஒருவரின் புத்திசாலித்தனம் எப்படி இருக்கும், பக்குவமாக அணுகும் திறன் என அறிவுத்திறனை மேம்படுத்திக் கொள்ளும் ராசிகள் என சில ராசிகளை ஜோதிடர்கள் வகைப்படுத்தியிருக்கின்றனர். அதன்படி, எந்த ராசிக்காரர்கள் புத்திசாலித்தனத்தை பிறப்பிலேயே கொண்டவர்கள் என்பதைத் தெரிந்துக் கொள்வோம்...

கன்னி ராசிக்கு அதிபதி புதன் என்பதால், இந்த  கிரகத்தின் தாக்கம் கன்னி ராசிக்காரர்கள் மீது அதிகமாக இருக்கும். அவர்கள் புத்திசாலிகளாக இருக்க காரணம், புதனின் ஆதிக்கத்தில் பிறந்தது தான் என்று சொல்லலாம். தேர்வுகள் போட்டிகளில் வெற்றிப் பெறும் அதிர்ஷ்டசாலி புத்திசாலிகள் கன்னி ராசியினர்.  

அறிவு மிக்கவர்கள் என்ற பட்டியலில் மிதுன ராசிக்காரர்களும் வநதுவிடுகின்றனர். அவர்களின் சிந்திக்கும் திறனுக்கும் புரிந்து கொள்ளும் திறனும் அற்புதமானவை. எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அவர்கள் வெற்றி பெற புதனின் ஆதிபத்தியமே காரணம். வெற்றி பெறுவதிலும் வல்லவர்கள் என்று மிதுன ராசியினரைச் சொல்லலாம்

ஐக்யூ லெவல் நன்றாக இருக்கும் ராசிக்காரர்களில் மகர ராசிக்காரர்களுக்கு முதலிடம், இந்த ராசிககரர்களுக்கு ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது போல கொண்டாட்டமானது. எதைப் பற்றியும் கவலைப்படாமல் துணிந்து செயல்படும் தைரியமான புத்திசாலிகள் மகர ராசிக்காரர்கள்...  

கும்ப ராசிக்காரர்கள் மிகவும் புத்திசாலிகள். வாழ்க்கையில் நிறைய பணம் சம்பாதிக்கும் ஆற்றல் பெற்ற கும்ப ராசிக்காரர்களுக்கு பண நெருக்கடி ஏற்படாது

விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய் என்பதால், தன்னம்பிக்கை அதிகம் கொண்டவர்கள். இந்த ராசிக்காரர்கள் பிறரின் மனதை விரைவில் கவரும் வகையில் கவர்ச்சிகரமாக பேசக்கூடிய புத்திசாலிகள். கஷ்டப்பட்டு, நஷ்டபப்ட்டாலும் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைகிறார்கள்.

இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை.பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்ட இந்தத் தகவல்களுக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link