ராசிபலன்: இன்று அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.!

Sun, 14 Mar 2021-5:56 am,

மேஷம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். புகழ், கௌரவம் கூடும் நாள்.

ரிஷபம்: குடும்பத்தினரின் ஆதரவுபெருகும். இழுபறியாக இருந்தவேலைகள் முடியும். உறவினர்கள் மதிப்பார்கள். புதிய சிந்தனைகள் தோன்றும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் நெளிவுசுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள்அலுவலகத்தில் மரியாதை கூடும். உற்சாகமான நாள்.

மிதுனம்:  சந்திராஷ்டமம் இருப்பதால்நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை தாமதங்கள் ஏற்படும். நண்பர்கள் உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்வார்கள். வியாபாரத்தில் ரகசியங்களைவெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் அளவாகப் பழகுங்கள். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

கடகம்: பிரச்னைகளின் ஆணிவேரை கண்டறிவீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள்.புதிய சிந்தனைகள் தோன்றும்.புது வேலை அமையும் வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

சிம்மம்: குடும்பத்தார் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அரசால்அனுகூலம் உண்டு. வழக்கில் நல்லதீர்ப்பு வரும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். புது பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். மதிப்புக்கூடும் நாள்.

கன்னி: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.

துலாம்:  எதிர்ப்புகளையும் தாண்டிமுன்னேறுவீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும்.பயணங்கள் திருப்திகரமாக அமையும்.வீட்டை விரிவுபடுத்துவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள் .

விருச்சிகம்: உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். அதிகாரப்பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சொந்த-பந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

தனுசு:  கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அழகும் இளமையும் கூடும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

 

மகரம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் கொஞ்சம் அலைச்சலும் சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். நெருங்கியவர்களிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்தியோகத்தில் சகஊழியர்களிடம் கவனமாக பழகுங்கள். பொறுமைதேவைப்படும் நாள்.

கும்பம்: குடும்பத்தினருடன் வீண்விவாதம் வந்து போகும். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்கவேண்டாம். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். உறவினர் நண்பர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில்  மறைமுக பிரச்சினைகள் வரக்கூடும். போராடி வெல்லும் நாள்.

மீனம்:  குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். யதார்த்தமாக பேசி கவர்வீர்கள். பூர்வீக சொத்து பிரச்னைகளுக்கு ஒன்று தீரும். உங்களால் பலனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். இன்பம் பெறும் நாள்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link