தென்னிந்திய திரையுலகின் முக்கியச் செய்திகள் புகைப்படத் தொகுப்பாக
வசூல் வேட்டையாட விரைவில் வருவிருக்கும் பீஸ்ட் திரைப்படம் விளம்பங்களில் சக்கைபோடு போடுகிறது. 10 வருடங்களுக்கு பிறகு நடிகர் விஜய் ஒரு சேனலுக்கு பேட்டி அளிக்கிறார். அவரிடம் நெல்சன் திலீப்குமார் கேள்வி கேட்பார் என்று தெரிகிறது.
நாக சைதன்யா - சமந்தா ரூத் பிரபு இணைந்து பணியாற்ற உள்ளனர் என்ற செய்திகள் வெளியானது. ஆனால் சமந்தாவுக்கு பதிலாக புதிய கதாநாயகி நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது
பிரசாத் தேவினேனி ஒரு பேட்டியில், பாகுபலி உலகில் ஒரு திரைப்படத்தை தயாரிப்பதற்கான திட்டவட்டமான வாய்ப்பு உள்ளது. பிரபாஸ் தனது பெரிய படங்களை முடித்துக் கொடுத்த் பிறகு, பாகுபலி 3 பற்றி முடிவெடுக்கப்படும்.
ஜூனியர் என்டிஆர் விரைவில் கொரட்டாலா சிவாவின் திரைப்படத்தை ஜூன் 2022 இல் தொடங்க உள்ளார். படத்திற்கு மொத்த தேதிகளை அவர் கொடுத்துள்ளதாக தெரிகிறது.
KGF 2 க்கு ஏற்கனவே இங்கிலாந்தில் 5000 டிக்கெட்டுகள் விற்கப்பட்டதாகத் தெரிகிறது. இது ஒரு படத்திற்கான அதிக முன்பதிவுகளில் ஒன்றாகும். கேஜிஎஃப் 2 படத்தில் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீனா டாண்டன் மற்றும் சஞ்சய் தத் நடித்துள்ளனர்.
பாகுபலிக்குப் பிறகு உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பதில் பிரபாசுக்கு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.