60 வயதில் மாதம் ரூ.50,000 பென்ஷன் வாங்கணுமா? NPS தான் அதற்கு சரியான சாய்ஸ், கணக்கீடு இதோ

Thu, 23 May 2024-4:54 pm,

தேசிய ஓய்வூதிய அமைப்பான NPS அற்புதமான இரு அரசாங்கத் திட்டமாகும். சந்தையுடன் இணைக்கப்பட்டிருந்தாலும், இந்தத் திட்டம் மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. NPS மூலம், உங்கள் ஓய்வு காலத்திற்கு கணிசமான நிதியைச் சேர்க்கலாம். 

இந்த திட்டத்தின் மூலம் வயதான காலத்தில் ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் பெற ஏற்பாடு செய்யலாம். இதில் டயர் 1 மற்றும் டயர் 2 என இரண்டு வகையான கணக்குகள் உள்ளன. யார் வேண்டுமானாலும் டயர் 1 கணக்கைத் திறக்க முடியும். ஆனால் டயர் 1 கணக்கு வைத்திருக்கும் நபர்கள் மட்டுமே டயர் 2 கணக்கை திறக்க முடியும். 

60 வயதிற்குப் பிறகு NPS இல் முதலீடு செய்யப்பட்ட மொத்தத் தொகையில் 60 சதவிகிதத்தை மொத்தமாக எடுத்துக் கொள்ளலாம், அதே நேரத்தில் குறைந்தபட்சம் 40 சதவிகிதத்தை ஆனுவிட்டியாக அதாவது வருடாந்திரமாகப் பயன்படுத்த வேண்டும். 

இந்த ஆண்டுத் தொகையிலிருந்து என்பிஎஸ் சந்தாதாரர்கள் (NPS Subscribers) ஓய்வூதியம் பெறுவார்கள். NPS திட்டத்தில் 50,000 ரூபாய்க்கு மேல் ஓய்வூதியம் பெற ஒவ்வொரு மாதமும் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதை இங்கே அறிந்து கொள்ளலாம்.

ஒருவர் 35 வயதில் NPS இல் முதலீடு செய்யத் தொடங்கினால், இந்த திட்டத்தில் 60 வயது வரை தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும், அதாவது 25 வருடங்களுக்கு திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். ஒவ்வொரு மாதமும் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஓய்வூதியம் பெற, ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் 15,000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். 

NPS கால்குலேட்டரின் படி, நீங்கள் 25 ஆண்டுகளுக்கு தொடர்ந்து மாதம் ரூ.15,000 முதலீடு செய்தால், உங்கள் மொத்த முதலீடு ரூ.45,00,000 ஆக இருக்கும். 10% வட்டி வீதத்தில், அதற்கான மொத்த வட்டி ரூ.1,55,68,356 ஆக இருக்கும்.

இந்த வழியில் என்பிஎஸ் சந்தாதாரரிடம் மொத்தம் ரூ.2,00,68,356 என்ற மிகப்பெரிய தொகை இருக்கும். இந்தத் தொகையில் 40 சதவீதத்தை நீங்கள் வருடாந்திரமாகப் பயன்படுத்தினால், 40 சதவீதத்தின்படி, ரூ. 80,27,342 உங்கள் ஆண்டுத் தொகையாகவும், மொத்தத் தொகையாக ரூ.1,20,41,014-ஐயும் பெறுவீர்கள். நீங்கள் வருடாந்திர தொகையில் 8% வரை வருமானம் பெற்றால், ஒவ்வொரு மாதமும் ரூ.53,516 ஓய்வூதியமாகப் பெறுவீர்கள்.

NPS EEE பிரிவில் வருகிறது. ஆகையால், அதில் முதலீடு செய்யப்படும் பணம், அதற்குக் கிடைக்கும் வட்டி மற்றும் முதிர்வுக்குப் பிறகு கிடைக்கும் தொகை ஆகியவற்றுக்கு வரி விலக்கு கிடைக்கும். NPS இல் முதலீடு செய்வது பிரிவு 80C இன் கீழ் வரி விலக்குக்கான பலனை அளிக்கிறது. இதன் வரம்பு ரூ 1.5 லட்சம் ஆகும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link