உடலுறவு... ஒரு மாதத்திற்கு எத்தனை முறை வைத்துக்கொள்ள வேண்டும்?

Mon, 09 Sep 2024-11:58 pm,

உடலுறவு குறித்து பொதுவெளியில் பேசுவதே தடைசெய்யப்பட்ட நிலையில், தற்போது அதுகுறித்த புதிய ஆய்வறிக்கை ஒன்றை வெளியாகி உள்ளது. இந்த ஆய்வறிக்கை அமெரிக்காவின் இந்தியானா பல்கலைக்கழகத்தின் கின்சி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டது.

 

அதாவது, வெவ்வேறு தலைமுறைகளை சேர்ந்த மக்கள் ஒரு மாதத்திற்கு சராசரியாக எத்தனை முறை உடலுறவு மேற்கொள்கிறார்கள் என்பது குறித்து இந்த ஆய்வறிக்கை விவாதிக்கிறது.  இதில் Boomers (1946-1964), Generation X (1965-1980), Millennail (1981-1996), Generation Z (1997-2012) ஆகிய நான்கு தலைமுறைகளிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

 

அதாவது, Feeld என்ற டேட்டிங் ஆப்பில் இருக்கும் 3,310 பேரிடம் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இதில் 71 நாடுகளை சேர்ந்த 18 வயதில் இருந்து 75 வயதுடையவர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதாவது இவர்களிடம் அவர்களின் பாலியல் வாழ்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 

 

Gen Z தலைமுறை எப்படி பாலியல் வாழ்வையும், உறவையும் மறுவரையறை செய்கிறது என்பது குறித்து இந்த ஆய்வறிக்கை விவாதிக்கிறது. அப்படியிருக்க, மற்ற தலைமுறையினரை விட Gen Z தலைமுறை குறைந்த அளவிலேயே உடலுறவு வைத்துக்கொள்வதாக இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. 

 

இந்த ஆய்வறிக்கையின்படி, Gen Z தலைமுறையினர் ஒரு மாதத்திற்கு சராசரியாக மூன்று முறை உடலுறவு மேற்கொள்கின்றனர். Gen X மற்றும் Millennials ஒரு மாதத்திற்கு சராசரியாக 5 முறை உடலுறவு மேற்கொள்வதாக அந்த ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. அதேநேரத்தில் Boomers தலைமுறையினர் ஒரு மாதத்திற்கு சராசரியாக 3 முறையே உடலுறவு மேற்கொள்கின்றனர். 

 

அந்த வகையில், Gen Z மற்றும் Boomers தலைமுறையினர் குறைவான பாலியல் வேட்கையுடன் இருக்கிறார்கள் என இந்த அறிக்கை கூறுகிறது. அதாவது, அதிக வயதானவர்களும் சரி இளம் வயதினரும் சரி பாலியல் வாழ்வில் குறைந்த அளவிலேயே கவனம் செலுத்துகின்றனர். இளம் தலைமுறையினர் பாலியல் வாழ்க்கையைவிட தங்களின் பணி வாழ்க்கையில்தான் அதிக ஆர்வம் செலுத்துவதாக அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. 

 

மேலும், ஆய்வில் பங்கேற்ற Gen Z தலைமுறையினரில் 50 சதவீதத்தினர் சிங்கிள் எனவும், Millennials, Gen X மற்றும் Boomers உள்ளிட்ட தலைமுறைகளில் ஐந்தில் ஒரு பங்கு அதாவது 20 சதவீதத்தினர்தான் சிங்கிள் என ஆய்வறிக்கை கூறுகிறது. 

 

ஒரு மாதத்தில் எத்தனை முறை உடலுறவு வைத்துக்கொள்வது என்பது குறித்து இந்த ஆராய்ச்சியாளர்கள் தகவல் அளித்தனர். குறைந்தபட்சம் வாரத்திற்கு ஒன்று என மாதத்திற்கு நான்கு முறையாவது உடலுறவு வைத்துக்கொள்வது ஆரோக்கியமான ஒன்றாக கூறுகிறார். அதிலும் குறிப்பாக உடலுறவில் இருவரும் திருப்தி அடைவது முக்கியம் என்கிறது இந்த ஆய்வு. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link