லேட்டா வந்தாலும் வெயிட்டா வந்திருக்காங்க.. பிக்பாஸ் வைல்டு கார்டு போட்டியாள்ர்களின் சம்பள விவரம்
விஜே அர்ச்சனா: சீரியல் நடிகை அர்ச்சனாவுக்கு ஒரு நாளைக்கு ரூ.18 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆர்.ஜே.பிராவோ: பிக்பாஸில் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்துள்ள பிராவோவுக்கு ஒரு நாளைக்கு ரூ.12 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
பேச்சாளர் அன்னபாரதி: பட்டிமன்ற பேச்சாளரான அன்ன பாரதி பிக்பாஸ் வைல்டு கார்டு போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார். இவருக்கு ஒரு நாளைக்கு ரூ.20 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
தினேஷ்: சீரியல் நடிகர் தினேஷுக்கு ஒரு நாளைக்கு ரூ.20 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
கானா பாலா: வைல்டு கார்டு போட்டியாளராக வந்துள்ள கானா பாலாவுக்கு ஒரு நாளைக்கு ரூ.25 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிகம் சம்பளம் யாருக்கு: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் போட்டியாளர்களில் அதிகம் சம்பளம் வாங்கும் போட்டியாளர் என்றால் அது விசித்ரா தான். அவருக்கு ஒரு நாளைக்கு ரூ.28 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.