உங்கள் வயதிற்கு ஏற்ப தினசரி எவ்வளவு தூக்கம் அவசியம் தேவை?
குழந்தை பிறந்து 3 மாதங்கள் வரை அவர்களுக்கு அதிகம் தூக்கம் தேவைப்படும். புதிதாகப் பிறந்த குழந்தைக்கு ஒரு நாளைக்கு 14 முதல் 17 மணிநேர தூக்கம் தேவைப்படுகிறது. 4 முதல் 11 மாதங்கள் ஆன குழந்தைகளுக்கு சுமார் 12 முதல் 15 மணி நேர தூக்கம் தேவைப்படுகிறது.
1 முதல் 2 வயது வரை குழந்தைகளுக்கு விளையாடும் நேரம், ஆற்றல் போன்றவற்றிற்கு போதிய ஓய்வு தேவை. அவர்களுக்கு ஒரு நாளுக்கு 11 முதல் 14 மணிநேரம் தூக்கம் தேவை. 3 முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 10 முதல் 13 மணி நேர தூக்கம் தேவை.
6 முதல் 12 வயது வரை உள்ள பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு கண்டிப்பாக 9 முதல் 12 மணி நேர தூக்கம் தேவை. 13 முதல் 18 வயது வரை உள்ள டீன் ஏஜ் குழந்தைகளுக்கு 8 முதல் 10 மணி நேர தூக்கம் தேவை.
18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்களுக்கு வேலை, குடும்பம் போன்றவற்றை சமாளிக்க போதிய தூக்கம் இல்லாமல் போகலாம். இருப்பினும் இவர்கள் ஒரு நாளைக்கு 7 முதல் 9 மணி நேரம் தூங்க வேண்டியது அவசியம்.
60 வயதிற்கு மேற்பட்டவர்களில் பெரும்பாலானனோருக்கு மூட்டு வலி மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே போதிய ஓய்வு தேவை. வயதானவர்களுக்கு ஒரு நாளைக்கு 7 முதல் 8 மணி நேரம் தூக்கம் தேவை.
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தும் பொதுவான தூக்கத்தின் அளவே. எனவே இதனை தாண்டி உங்களுக்கு தூக்க கோளாறுகள் அல்லது உடல்நலப் பிரச்சினைகளை இருந்தால் உரிய மருத்துவரை சந்திப்பது நல்லது.