கர்ப்பிணிகளுக்கு மத்திய அரசு கொடுக்கும் ரூ.6000 உதவித் தொகை பெறுவது எப்படி?

Sat, 28 Dec 2024-8:21 am,

மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) என்ற திட்டத்தின் கீழ் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு நிதியுதவி அளிக்கிறது. சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய சமூகப் பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு மகப்பேறு சலுகைகளை வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கம். 

கர்ப்பிணி பெண்களுக்கு இலவச மருந்து, கர்ப காலம் மற்ரும் அதற்கு பின் அனைத்து பரிசோதனைகளுக்கும் வசதியை செய்து கொடுக்கும். மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப காலங்களில் வெவ்வேறு காலங்களில் 3 தவணைகளில் கொடுக்கப்படும். குறைந்தபட்சம் 19 ஆண்டுகளுக்கு மேல் உள்ள பெண்ணாக இருக்க வேண்டும். இரண்டாவது பெண் குழந்தையாக இருந்தால் ஒரே தவணையில் 6000 ரூபாய் கொடுக்கப்படும். முதல் பெண் குழந்தைக்கு மட்டும் மூன்று தவணைகளில் கொடுக்கப்படும். 

இந்த திட்டத்துக்கு அருகில் உள்ள அங்கன்வாடி மையத்துக்கு சென்று விண்ணப்பிக்கலாம். கர்ப்பிணிகளுக்கு அங்கு உள்ள ஊழியர்களே வழிகாட்டுவார்கள். முதல் தவணையில் ஆறு மாதங்களுக்குள் கர்ப்பத்தைப் பதிவுசெய்து, பிரசவத்திற்கு முந்தைய பரிசோதனையின்போது ரூ. 3,000/ கொடுக்கப்படும்

இரண்டாவது தவணை பிரசவத்துக்குப் பிறகு குடும்ப நல அமைச்சகத்தின் உலகளாவிய நோய்த்தடுப்புத் திட்டத்தின் கீழ் 14 வாரத்துக்குப் பிறகு குழந்தைக்கு தடுப்பூசி போட்ட பிறகு ரூ. 2,000/ வழங்கப்படும். இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் குழந்தை பிறந்ததும் 6000 ரூபாய் ஒரே தவணையாக வழங்கப்படும். ஒருவேளை கருச்சிதைவு ஏற்பட்டால் அடுத்த முறை பயனாளி புதிய பயனாளியாகக் கருதப்படுவார்.

இந்த திட்டத்துக்கான தகுதி என்னவென்றால் விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 19 வயது மற்றும் கர்ப்பிணிப் பெண்ணாக இருக்க வேண்டும். குழந்தை பிறந்த 270 நாட்களுக்குள் தகுதியான பயனாளிகள் PMMVY திட்டத்தின் கீழ் பயன் பெற விண்ணப்பிக்கலாம். ஒரு பயனாளி தனது இரண்டாவது கர்ப்பத்தில் இரட்டைக் குழந்தைகள்/மூன்று குழந்தைகள்/நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்தால், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் பெண் குழந்தையாக இருந்தால், அவர் PMMVY 2.0 விதிமுறைகளின்படி இரண்டாவது பெண் குழந்தைக்கு ஊக்கத்தொகையைப் பெறுவார்.

தாழ்த்தப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண்கள், பகுதியளவு (40%) அல்லது முழுமையாக ஊனமுற்ற பெண்கள் (திவ்யாங் ஜன்), பிபிஎல் ரேஷன் கார்டு வைத்திருக்கும் பெண்கள், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா (PMJAY) கீழ் பெண்கள் பயனாளிகள். இ-ஷ்ரம் அட்டை வைத்திருக்கும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

கிசான் சம்மன் நிதியின் கீழ் பயனடையும் பெண் விவசாயிகள், MGNREGA வேலை அட்டை வைத்திருக்கும் பெண்கள், நிகர குடும்ப வருமானம் ரூ.1000க்கும் குறைவாக உள்ள பெண்கள். ஆண்டுக்கு 8 லட்சம் வருமானம் உள்ள பெண்கள், NFSA சட்டம் 2013ன் கீழ் ரேஷன் கார்டு வைத்திருக்கும் பெண்கள் தகுதியுடையவர்கள்.

ஆன்லைனில் விண்ணபிக்கலாம். இந்த திட்டத்தின் கீழ் பலன்களைப் பெற பயனாளியின் கணவரின் ஆதார் கட்டாயமில்லை. அதேநேரத்தில் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் மத்திய அரசு அல்லது மாநில அரசு அல்லது பொதுத்துறை நிறுவனத்தில் நிரந்தர வேலையில் இருப்பவர்கள் அல்லது தற்போதைக்கு நடைமுறையில் உள்ள எந்தவொரு சட்டத்தின் கீழும் இதே போன்ற பலன்களைப் பெறுபவர்கள் PMMVY இன் கீழ் பலன்களைப் பெற தகுதியற்றவர்கள்.

மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று Citizen Log in ஆப்சனை கிளிக் செய்யவும். மொபைல் எண்ணை உள்ளிட்டு சரிபார்க்கவும். பின்னர் முழு பெயர், மாநிலம், மாவட்டம், பகுதி, தொகுதி, கிராமம் மற்றும் பயனாளியுடனான உறவு போன்ற விவரங்களை உள்ளிடவும். பின்னர் அக்கவுண்ட் கிரியேட் ஆப்சனை கிளிக் செய்யவும்.

கணக்கு உருவாக்கப்பட்டவுடன். இணையதளத்தின் பிரதான முகப்புப் பக்கத்தில் உள்ள Log In ஆப்சனை கிளிக் செய்யவும். இப்போது இருக்கும் Login ஐடி, கடவுச்சொல் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும். பின்னர் திட்டத்திற்கு விண்ணப்பிக்கவும். முதல் குழந்தை அல்லது இரண்டாவது குழந்தைக்கு விண்ணப்பிக்கும் திட்டத்தின் கீழ் பொருத்தமான விருப்பத்தைத் தேர்வு செய்யவும். அனைத்து படிவ விவரங்களும் முடிந்ததும். Submit Button-ஐ கிளிக் செய்யவும்.

தேவையான ஆவணங்கள் : ஆதார் அட்டை, வங்கி/அஞ்சல் அலுவலகம், வங்கி கணக்கு விவரங்கள், குழந்தை பிறப்பு சான்றிதழ்,குழந்தைகளுக்கான தடுப்பூசி விவரங்கள் போன்றவை கொடுக்க வேண்டும்.

பதிவு செய்யும் போது பதிவேற்றம் செய்ய வேண்டிய ஆவணங்களின் பட்டியல் : நிகர குடும்ப வருமானம் ஆண்டுக்கு ₹ 8 லட்சத்திற்கும் குறைவாக உள்ள பெண்கள். MGNREGA வேலை அட்டை வைத்திருக்கும் பெண்கள். கிசான் சம்மன் நிதியின் கீழ் பயனடையும் பெண் விவசாயிகள். இ-ஷ்ரம் அட்டை வைத்திருக்கும் பெண்கள். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா (PMJAY) கீழ் பெண்கள் பயனாளிகள். 

பிபிஎல் ரேஷன் கார்டு வைத்திருக்கும் பெண்கள். பகுதியளவு (40%) அல்லது முழுமையாக ஊனமுற்ற பெண்கள் (திவ்யாங் ஜன்). எஸ்சி பெண்கள், எஸ்டி பெண்கள். கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் AWWS/ AWHS/ASHAS. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (NFSA), 2013ன் கீழ் ரேஷன் கார்டு வைத்திருக்கும் பெண் பயனாளிகள்.  பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) கீழ் பதிவு செய்ய மொபைல் ஆப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதிலும் விண்ணப்பிக்கலாம்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link