செயற்கை தொழில்நுட்பத்தில் ChatGPT போல் பாரத் ஜிபிடியை அறிமுகப்படுத்தும் அம்பானி
Reliance Jio விரைவில் ChatGPT தொழில்நுட்பத்திற்கு போட்டியாக பாரத் GPT என்ற திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. இந்திய தொழில்நுட்ப நிறுவனமான பாம்பே ஐஐடி (IIT-B) உடன் இணைந்து செயல்படுவதாக ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாமின் தலைவர் ஆகாஷ் அம்பானி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். புத்தாண்டில் இந்தியாவில் உருவாக்கப்பட்ட செயற்கை தொழில்நுட்பம் இந்தியாவில் சேவைகளை தொடங்கும்.
செயற்கை நுண்ணறிவுத் துறையின் அடுத்த கட்ட புரட்சியாகக் கருதப்படும் சாட்ஜிபிடி(ChatGPT) மூலமாக மனிதர்களால் உருவாக்கப்பட்டது போன்றே, மிகவும் நேர்த்தியாகக் கட்டுரைகளை உருவாக்க முடியும். சில பிழைகளும் குறைகளும் இருந்தாலும், எதிர்காலத்தில் மேம்படுத்தப்படக்கூடிய சாத்தியக்கூறு இதன் பயன்பாட்டை மிகவும் முக்கியமானதாக்குகிறது.
அதிநவீன AI இந்தியாவில் உருவாக்கப்படுவதில் ரிலையன்ஸ் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) இன் தலைவர் முகேஷ் அம்பானி, பல திட்டங்களை வைத்திருக்கிறார். அதில் ஒன்று, செயற்கை நுண்ணறிவின் (AI) ஆற்றலைப் பயன்படுத்தி இந்தியாவில் உள்ள அனைவருக்கும் அணுகக்கூடியதாக மாற்றுவதற்கான ஜியோ பிளாட்ஃபார்ம்களின் லட்சியத் திட்டங்கள் ஆகும். வேகமாக வளர்ந்து வரும் உலகளாவிய நிலப்பரப்பில், போட்டித்தன்மையுடன் இருக்க AI கண்டுபிடிப்புகளில் இந்தியா முன்னணியில் இருக்க வேண்டியது அவசியம் என்று முகேஷ் அம்பானி பல இடங்களில் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய பயனர்கள் அனைவரும் அணுகக்கூடிய AI ஐ பெற வேண்டும் என்பதற்காக ChatGPT போன்ற AI அமைப்புகளை உருவாக்க ரிலையன்ஸின் ஜியோ தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அம்பானியின் செயற்கை நுண்ணறிவுத் திட்டங்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.
ஏராளமான தரவு மற்றும் திறமையான பணியாளர்கள் காரணமாக உலகளாவிய AI புரட்சியில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும் திறனை இந்தியா கொண்டுள்ளது. இருப்பினும், AI இன் மகத்தான கணக்கீட்டு கோரிக்கைகளை கையாள ஒரு வலுவான டிஜிட்டல் உள்கட்டமைப்பு அவசியமாக இருக்கிறது. இந்தியாவிடம் தரவு உள்ளது. இந்தியாவில் திறமை உள்ளது. ஆனால் AI இன் மகத்தான கணக்கீட்டு கோரிக்கைகளை கையாளக்கூடிய டிஜிட்டல் உள்கட்டமைப்பும் இந்தியாவில் தேவை என்று அம்பானி கருதுகிறார்.
AI மற்றும் ஜியோ இயங்குதளங்கள் இந்தியா முழுவதும் AI-ஐ அணுகக்கூடியதாக மாற்றுவதற்கான அர்ப்பணிப்பின் மாற்றத்தக்க தாக்கத்தை எடுத்துக்காட்டுகிறது, AI கண்டுபிடிப்புகளுக்கான உலகளாவிய மையமாக நாட்டை நிலைநிறுத்தும் முயற்சி பாரத் ஜிபிடி என்று சொல்லலாம்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் AI-ready computing powerஇல் முதலீடு செய்து, AI பயன்பாடுகளுக்கு 2000 மெகாவாட் திறனை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முதலீடு கிளவுட் மற்றும் எட்ஜ் கம்ப்யூட்டிங் இரண்டையும் உள்ளடக்கும்
உலகளாவிய AI புரட்சி நம்மைச் சுற்றியுள்ள உலகத்தை மாற்றியமைக்கிறது, நாம் நினைப்பதை விட விரைவில், அறிவார்ந்த பயன்பாடுகளானது, நமது தொழில்கள், பொருளாதாரம் மற்றும்அன்றாட வாழ்க்கையையும் மறுவரையறை செய்து புரட்சியை ஏற்படுத்தும். உலகளவில் போட்டித்தன்மையுடன் இருக்க, இந்தியா புதுமை, வளர்ச்சி மற்றும் தேசியத்திற்காக AI ஐப் பயன்படுத்த வேண்டியது அவசியமாகிறது
AI மேம்பாடுகளுடன் புதுப்பித்த நிலையில் இருக்க, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் அதன் குழு மற்றும் திறன்களை தீவிரமாக விரிவுபடுத்துகிறது, ஜெனரேட்டிவ் AI போன்ற அதிநவீன AI இல் கவனம் செலுத்துகிறது.
இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. ஜீ மீடியா இந்த தகவல்களை தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்தவில்லை