Tirupati | தடைகளை தாண்டி திருப்பதி செல்ல வீட்டில் செய்ய வேண்டிய வழிபாடு
திருப்பதி ஏழுமலையான தரிசிக்க நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் படையெடுத்து வருகின்றனர். ஊர் கடந்து, மாநிலம் கடந்து, நாடு விட்டு நாடு கடந்து வந்து ஏழுமலையான பய பக்தியுடன் தரிசிப்பவர்கள் ஏராளம்.
அந்த ஏழுமலையானை தரிசிக்க வேண்டும் என்றால் அவர் நினைத்தால் மட்டுமே உங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும். ஏழு மலைகளை கடந்து செல்வதே ஒருவித சோதனை தான். அந்த சோதனை பயணத்தை கடந்து, கால் வலிக்க நின்று தான் அவரை தரிசக்க முடியும்.
அப்படி சோதனைகளை எதிர்கொண்டு வருபவரகளை இன்முகத்தோடு வரவேற்கும் ஏழுமலையான், கேட்ட வரத்தை கொடுக்கக்கூடியவர். இந்தியாவில் இன்னும் ஒருமுறையாவது திருப்பதி செல்ல வேண்டும் என நினைத்துக் கொண்டிருப்பவர்கள் பல கோடி பேர்.
அத்தனை பேரில் உங்களுக்கு திருப்பதி செல்ல வாய்ப்பு கிடைப்பது என்பதே பாக்கியம் தான். ஆனால், அந்த பாக்கியத்துக்காக உங்களை நீங்கள் தயார்படுத்தும்போது பல தடைகள் வரும். திருப்பதி செல்ல வேண்டும் என நினைத்த உடன் போக முடியாத சூழல்கள் உங்களை சூழும்.
அதனால், திருப்பதி பயணத்தை ஒத்தி போடலாமா? என நீங்கள் நினைப்பீர்கள். பலருக்கும் இது நடக்கக்கூடியது தான். இருப்பினும் அந்த தடைகளை தாண்டி நீங்கள் ஏழுமலையான தரிசிக்க வேண்டும் என்றால் சனிக்கிழமை குல தெய்வ கோயிலுக்கு செல்லுங்கள்.
அங்கு உங்கள் மனக்குறையை கொட்டி திருப்பதி செல்ல நல்ல வழி காட்டுமாறும், குடும்ப பிரச்சனைகளை தீர்க்குமாறு மனமுருக வேண்டிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு சனிக்கிழமையும் தவறாமல் இந்த பிரார்த்தனையை செய்யுங்கள்.
குல தெய்வ கோயிலில் இருந்து வீட்டுக்கு வந்தவுடன் பெருமாள் படம் முன்பு அமர்ந்து ஓம் நமோ நாராயணா என்ற மந்திரத்தை சொல்லி திருப்பதி பயணம் சிறப்பாக இருக்குமாறும், அதற்கு நல்ல வழியை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் வேண்டிக் கொள்ளுங்கள். உங்கள் திருப்பதி பயணம் சுபமாக அமையும்.