படிப்பில் சுட்டியாக இல்லன்னாலும் வாழ்வில் கெட்டியாக இருக்க 8 வழிகள்!!
உணர்ச்சி அறிவு:
உங்கள் உணர்ச்சிகள் குறித்த அறிவு உங்களுக்கு இருக்க வேண்டும். இதனால் நீங்கள் மனிதர்களை படித்து அதன்படி நடந்து கொள்ள முடியும். இது, உறவுகளில் முக்கியமான முடிவுகளை எடுக்க உங்களுக்கு பயன்படும்.
செயல்திறன் படிப்பு:
வாழ்க்கையில் நாம் பிராக்டிகலாக சில விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும். சமையல் செய்வது, நிதி மேலான்மை உள்ளிட்ட விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும்.
ஆர்வம்:
கற்றுக்கொள்ளும் ஆர்வம் நின்று விடவே கூடாது. புத்தகம் படித்தல், பலதரப்பட்ட மக்களுடன் பேசுதல் போன்ற விஷயங்களை செய்து கொண்டே இருக்க வேண்டும்.
தொடர்பு:
வாழ்வில், நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை நாம் 80% தீர்மானித்தாலும், நம்மை சுற்றி இருக்கும் நபர்களும் தீர்மானிப்பர். எனவே, உங்களுக்கு பயன் தரும் நபர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
விமர்சன சிந்தனை:
வாழ்வில் எப்போதும், விமர்சன சிந்தனை கொண்ட ஆளாக நீங்கள் இருக்க வேண்டும். ஏன், எதற்கு, எப்படி போன்ற கேள்விகளை கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.
நிலையறிதல்:
மனதை, அனைத்திற்கும் திறம்பட தயார் படுத்த நமக்குள் நாமே பேசி, நம் நிலையை அறிந்து கொள்ள வேண்டும். இது, கடினமான சூழல்களை கடக்க உதவும்.
இலக்குகள்:
இலக்குகள் அற்ற பாதையில் என்றும் செல்லவே கூடாது. வாழ்வில் எதையாவது சாதிக்க விரும்பினால் அதை நோக்கி ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்.
எழுந்து கொள்ளும் திறன்:
வாழ்வில் அனைவருக்குமே தோல்வி வரும், கடினமான தருணங்கள் வரும். அந்த சமயங்களில், நாம் இன்னும் வலிமையுடன் எப்படி எழுந்து கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு அதன்படி நடக்க வேண்டும்.