தன்னம்பிக்கையை வளப்பது எப்படி?

Mon, 27 Jan 2025-6:36 pm,

முதலில் மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. ஏனென்றால் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு திறமை இருக்கும். எனவே உங்களுக்கு என்ன தேவை என்பதை ஆராய்ந்து அதை நோக்கிப் பயணியுங்கள். 

உங்களுக்கு பிடித்தமான ஃபிட்டான ஆடை அணிவதன் மூலம் நமக்குள் ஒரு தன்னம்பிக்கை பிறக்கும். அதேபோல் உங்கள் காலணிகள் மற்றும் நீங்கள் அணியக்கூடிய மற்ற உபகரணங்களிலும் கவனம் செலுத்துங்கள்.

ஒரு விஷயத்தை நீங்கள் செய்ய தொடங்கிய உடனேயே அதற்கான பலன் கிடைக்கவில்லை என்றால் சோர்ந்து விட வேண்டாம். சில விஷயங்களுக்கு நீண்ட பயணம் தேவைப்படும். எனவே தன்னம்பிக்கையை விட்டுவிட வேண்டாம். 

எந்த ஒரு விஷயத்தையும் பாசிட்டிவ் ஆக அணுக வேண்டும். உங்களுக்கு தன்னம்பிக்கை எது அளிக்கிறதோ, அதை செய்யுங்கள். புத்தகம் படிப்பது, தன்னம்பிக்கையான பேச்சை கேட்பது என உங்களுக்கு தோன்றியதைச் செய்யுங்கள். 

எந்த ஒரு விஷயத்தையும் பாசிட்டிவ் ஆக அணுக வேண்டும். உங்களுக்கு தன்னம்பிக்கை எது அளிக்கிறதோ, அதை செய்யுங்கள். புத்தகம் படிப்பது, தன்னம்பிக்கையான பேச்சை கேட்பது என உங்களுக்கு தோன்றியதைச் செய்யுங்கள். 

எங்கும் எதற்காகவும் தயங்க வேண்டாம். தன்னம்பிக்கையுடன் தைரியமுடன் பேசுங்கள். மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என நினைக்க வேண்டாம். 

எப்போது நிமிர்ந்து நிற்கவோ, அமரவோ வேண்டும். தோள்கள் தொங்கியபடி இருக்கும் போது எதையும் தன்னம்பிக்கையோடு செய்ய முடியாது. நிமிர்ந்து நிற்பது, எதிர் உள்ளவரிடம் கண்களை பார்த்து பேசுவது போன்ற விஷயங்கள் நமது தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும் குணங்கள். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link