தெரியாத நபரின் எண்ணை சேமிக்காமலேயே வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்ப சீக்ரெட் தெரியுமா? சுலபமான வழிமுறை
மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதற்கான சிறந்த வழியாக வாட்ஸ்-அப் செயலி உள்ளது. ஃபோனில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இணைவதற்குக் கட்டணமில்லாத சேவைகளை வழங்குகிறது
வாட்ஸ்அப்பில் புதிய நபருடனும் தொடர்பு கொள்வதற்கு, முதலில் அவரது எண்ணை மொபைலின் தொடர்பு பட்டியலில் சேமிக்க வேண்டும். அதன் பிறகு தான் வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பமுடியும்.
ஒருவரின் எண்ணை மொபைலில் சேகரிப்பது மிகவும் நேரத்தை எடுத்துக்கொள்ளும் செயல்முறையாகும். முதலில் அந்த நபரின் எண்ணை போனில் சேமித்த பிறகு, வாட்ஸ்அப்பைத் திறந்து அந்த எண்ணைத் தேடிய பிறகே மெசேஜ் செய்யலாம்.
உண்மையில் எண்ணைச் சேமிக்காமல் புதிய நபருடனும் எளிதாக தகவல்களை பரிமாறிக்கொள்ளலாம் தெரியுமா?
இது மிகவும் எளிதான வழிமுறைதான், தெரிந்துக் கொள்ளுங்கள்... முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப்பை திறந்து உங்கள் ME எனத் தட்டச்சு செய்யவும், பிறகு உங்கள் சொந்த சுயவிவரத்திற்கு (ப்ரொஃபைல்) செல்லுங்கள்.
அதன் பிறகு, எண் நீல நிறத்தில் தோன்றத் தொடங்கும். பின்னர் தொடர்பு கொள்ள வேண்டிய எண்ணைத் டைப் செய்யவும். இதற்குப் பிறகு ஒரு பாப் அப் மெனு திறக்கும், அங்கு XXXXX உடன் Chat என்ற விருப்பத்தைப் பெறுவீர்கள்.
இந்த விருப்பத்தை நீங்கள் தட்டியவுடன், புதிய சாட் திரை திறக்கும். இங்கே நீங்கள் மொபைல் எண்ணை சேமிக்காமலேயே எளிதாக செய்தி அனுப்ப முடியும். இந்த செயல்முறை மிகவும் எளிதானது மற்றும் உங்கள் நேரத்தையும் சேமிக்கிறது.
பொறுப்புத் துறப்பு: இணையத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையில் உள்ள தகவலின் உண்மைத்தன்மைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது