எதையும் டெலிட் செய்யாமல் Storage Clear பண்ணலாம்! எப்படி தெரியுமா?

Wed, 04 Dec 2024-1:21 pm,

போனில், எந்த வீடியோ-போட்டோவையும் டெலிட் செய்யாமல் எப்படி ஸ்டோஜ் க்ளியர் செய்யலாம் என்பது குறித்து, இங்கு பார்ப்போம். 

நம் போனில் இருக்கும் செயலிகளில், Cache இருக்கும். Settings > Storage > Apps > Select App > Clear Cache ஆப்ஷனுக்கு சென்று, இதனை க்ளியர் செய்ய வேண்டும். நாம் அதிகம் பயன்படுத்தும் ஆப்களில்தான் அதிக cache இருக்கும். 

நம் போனில், எப்போதோ ஏற்றி வைத்த கேமிங் ஆப், ஒரு முறை உபயோகத்திற்காக இன்ஸ்டால் செய்த சில ஆப்கள் என பல இருக்கும். இவற்றை, டெலிட் செய்யலாம். 

நெட்ஃப்ளிக்ஸ், ஸ்பாடிஃபை, யூடியூப் போன்ற தளங்களில் வீடியோ, ஆடியோ ஆகியவற்றை ஆஃப்லைனில் டவுன்லோட் செய்து வைத்திருப்போம். இவற்றை, டெலிட் செய்ய வேண்டும். 

போனில் இருக்கும் டாக்குமெண்ட்கள், பெரிதாக இருந்தால் அவற்றை கூகுள் ட்ரைவ், ஒன் ட்ரைவ், iCloud போன்ற தளங்களில் மூவ் செய்து வைத்துக்கொள்ளலாம். 

வாட்ஸ்-ஆப்பில் நாம் பல்வேறு தளங்களில் இருப்போம். எனவே, வாட்ஸ் ஆப்பில், Manage Storage என்ற ஆப்ஷனுக்கு சென்று, forwarded files மற்றும் தேவையற்ற டேட்டாவை டெலிட் செய்யலாம். 

நமக்கு, தேவையற்ற Spam மெசஜ்கள் அடிக்கடி வரும். இவற்றை பார்க்காமல் நாம் அப்படியே விட்டிருப்போம். அவையும் கூட போனில் ஸ்டோரேஜ் அதிகமான ஸ்பேசை பிடித்து வைத்திருக்கும். எனவே, இவற்றை டெலிட் செய்யலாம்.  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link