யூரிக் அமில பிரச்சனையா... டயட்டில் சேர்க்க வேண்டிய ‘சில’ உணவுகள்!
உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிப்பது ஆபத்தான நிலை. அதிக யூரிக் அமிலம் காரணமாக, கீல்வாதம் மற்றும் மூட்டு வலி போன்ற பல தீவிர நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது. உண்மையில், யூரிக் அமிலம் என்பது நமது உடலில் இருக்கும் ஒரு வகையான கழிவுப் பொருளாகும், இது பியூரின் எனப்படும் ஒரு பொருள் உடைக்கப்படும்போது உருவாகிறது. உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாகும் போது, மூட்டுகளில் வலி, வீக்கம், நடப்பதில் சிரமம் போன்ற பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளது. இதனைக் கட்டுப்படுத்தாவிட்டால் சிறுநீரகக் கற்கள் மற்றும் இதய நோய்களை உண்டாக்கும். நார்ச்சத்து நிறைந்த சில உணவுகளை உண்பதன் மூலம் யூரிக் அமிலத்தை எளிதில் கட்டுப்படுத்தலாம்.
ஆப்பிளை உட்கொள்வது யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்துவதில் நன்மை பயக்கும். நார்ச்சத்து இதில் ஏராளமாக உள்ளது. இது இரத்தத்தில் உள்ள யூரிக் அமிலத்தை உறிஞ்சுகிறது. இது தவிர, ஆப்பிளில் உள்ள மாலிக் அமிலம் உடலில் யூரிக் அமிலத்தின் பாதிப்பை குறைக்க உதவுகிறது. இதனை தொடர்ந்து உட்கொள்வது செரிமான மண்டலத்தை பலப்படுத்துகிறது
நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆளிவிதை நுகர்வு, அதிக யூரிக் அமில பிரச்சனையில் நன்மை பயக்கும். உடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதை குறைக்க உதவுகிறது. தவிர, மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்தும் நிவாரணம் தருகிறது. ஆளிவிதையை வெதுவெதுப்பான நீரில் தினமும் காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வது யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த உதவும்.
அதிக யூரிக் அமில பிரச்சனையால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஓட்ஸை உட்கொள்வது நன்மை பயக்கும். இதில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது, இது அதிக யூரிக் அமிலம் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. இதனை உட்கொள்வதால் செரிமான பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும். கூடுதலாக, இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும் எடை குறைக்கவும் உதவுகிறது.
அதிக யூரிக் அமிலம் உள்ளவர்கள் குளிர்காலத்தில் பச்சை பட்டாணி சாப்பிட வேண்டும். நார்ச்சத்து இதில் அதிக அளவில் உள்ளது, இது யூரிக் அமிலத்தை குறைக்க உதவுகிறது. இது தவிர, இதில் உள்ள செலினியம், மூட்டுவலி பிரச்சனையை குறைக்க உதவும்.
பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.