ஒரே நேரத்தில் அனைத்து மெயில்களையும் சுலபமாக நீக்குவது எப்படி?
முதலில் ஜிமெயிலுக்கு சென்று உங்கள் அக்கவுண்டை லாகின் செய்து உள்ளே போக வேண்டும். எந்த கேட்டகிரியில் உள்ள மெயிலை டெலீட் செய்ய விரும்புகிறீர்களோ அதனை தேர்வு செய்ய வேண்டும்.
மேல்புறத்தில் ஆர்ச்சிவ் பாக்ஸுக்கு அருகேயுள்ள செக் பாக்ஸை க்ளிக் செய்ய வேண்டும், அதன் பின்னர் 'செலெக்ட் ஆல்...கான்வர்சேஷனை<கேட்டகிரி>' என்பதை தேர்வு செய்யவேண்டும்.
அதனையடுத்து தேர்ந்தெடுக்கப்பட்ட தேவையில்லாத மெயில்கள் அனைத்தையும் டெலீட் செய்ய மேலே உள்ள டெலீட் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும், அதன் பின்னர் ஓகே என்பதை தேர்வு செய்யவேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலம் தேவையில்லாமல் ஒவ்வொரு மெயிலையும் தனித்தனியாக டெலீட் செய்யாமல் மொத்தமாக டெலீட் செய்துவிடலாம், இருப்பினும் இந்த அம்சம் டெஸ்க்டாப்பிற்கு மட்டும் தான் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.