ரேஷன் கார்டு 2 நிமிடத்தில் டவுன்லோடு செய்வது எப்படி? முக்கிய டிப்ஸ்
தமிழ்நாடு அரசின் குறைந்த விலையில் வழங்கக்கூடிய அரிசி, எண்ணெய் மற்றும் மளிகை பொருட்களை குறைந்த விலையில் ரேஷன் கடைகளில் வாங்கிக் கொள்ளலாம். அதற்கு உங்களிடம் ரேஷன் கார்டு இருக்க வேண்டும்.
முன்பெல்லாம் புத்தக வடிவில் இருந்த தமிழ்நாடு அரசின் ரேஷன் கார்டுகள் இப்போது ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றப்பட்டுவிட்டன. உங்களுக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டு வேண்டும் என்றால் தமிழ்நாடு அரசின் TNPDS வெப்சைட்டுக்கு சென்று ஆன்லைனிலேயே விண்ணப்பித்துக் கொள்ள முடியும்.
வீட்டில் இருந்தபடியே உங்களுக்கான ரேஷன் கார்டை பெற்றுக் கொள்ளவும் முடியும். ஒருவேளை உங்களுக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டு அரசின் ஒப்புதலோடு கிடைத்துவிட்டால், அதனை ஆன்லைனில் இருந்து எப்படி டவுன்லோடு செய்வது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ஸ்மார்ட் கார்டுகள் பல வகைகள் உள்ளன. காவல்துறை அதிகாரிகளுக்கு, வருமானவரி கட்டுபவர்களுக்கு அடித்தட்டு மக்களுக்கு என ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒவ்வொரு வகையான கார்டுகள் இருக்கின்றன.
தமிழ்நாட்டில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு வெளிர் பச்சை நிறத்தில் ஸ்மார்ட் கார்டுகள் கொடுக்கப்படுகின்றன. சரி, இப்போது இந்த கார்டை வீட்டில் இருந்தபடியே பதிவிறக்கம் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
முதலில் ரேஷன் அட்டை மற்றும் புகார்கள் தொடர்பாக பதிவு செய்யக்கூடிய தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான TNPDS பக்கத்துக்கு செல்ல வேண்டும்.
அங்கு, தமிழில் "பயனாளி" என்றும், ஆங்கில மொழியில் பார்க்கிறீர்கள் என்றால் "Beneficiary" என்ற ஆப்சனும் இருக்கும். அதனை கிளிக் செய்ய வேண்டும்.
ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தபோது கொடுக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட்டு "Request an OTP" ஆப்சனை கிளிக் செய்யவும்.
இப்போது உங்களுடைய ஸ்மார்ட் கார்டு திரையில் காண்பிக்கும். "ஸ்மார்ட் கார்டு பிரிண்ட்" விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் ஸ்மார்ட் கார்டை உங்கள் மொபைல் சாதனத்தில் PDF ஆகப் பதிவிறக்கி சேமித்து வைத்துக் கொள்ளவும்.
தமிழ்நாட்டு மக்கள் இந்த வழியில் எளிமையாக தங்களுடைய ஸ்மார்ட் ரேஷன் கார்டை வெறும் 2 நிமிடத்தில் பெற்றுக் கொள்ளலாம். மற்ற மாநில மக்களுக்கு இந்த செயல்முறை வேறுபட்டு இருக்க வாய்ப்புள்ளது.