கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருந்தாலும் கடன் பெற சில டிப்ஸ்!
கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருப்பவர்கள் கிரெடிட் ஸ்கோர் நல்ல நிலையிலுள்ள இணை-விண்ணப்பதாரரின் உதவியோடு கடன் தொகையை பெற்றுக்கொள்ள முடியும்.
கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருப்பவர்கள் வங்கியில் குறைவான அளவு தனிநபர் கடனை கேட்கலாம், குறைவான தொகை என்பதால் கடன் வழங்குபவர் உங்களுக்கு கடன் வழங்க வாய்ப்புண்டு.
நீங்கள் வாங்குகின்ற கடன் தொகையை திருப்பி செலுத்திவிட ஏதுவாக உங்களிடம் நிலையான வேலையோ அல்லது நிலையான வருமானமோ இருப்பதை கடன் வழங்குபவரிடன் தெளிவாக கூற வேண்டும்.
நிதி சிக்கல் காரணமாக நீங்கள் மோசமான கிரெடிட் ஸ்கோர் வைத்திருந்தால், அதுகுறித்து நீங்கள் உங்கள் வங்கி அதிகரிடம் கலந்துரையாடலாம். சில சமயங்களில் உங்கள் சிபில் அறிக்கையில் ஏதேனும் தவறுகள் இருக்கக்கூடும், அதனால் அதனை தினமும் சரிபார்த்து தவறுகளை சரிசெய்துகொள்ள வேண்டும்.