அதிக மன அழுத்தமாக உள்ளதா? இந்த விஷயங்களை முயற்சி செய்து பாருங்கள்!
அதிக சத்துள்ள உணவுகளை சாப்பிடுவது மன அழுத்தத்தை போக்க உதவும். மேலும் உங்களுக்கு பிடித்தமான உணவுகளை வீட்டில் சமைத்தோ அல்லது கடையில் வாங்கி சாப்பிடும் போது மன அழுத்தம் குறைகிறது.
வாரம் முழுவதும் வேலை செய்வது ஒருவித சோர்வையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும். இதனை போக்க தினசரி உடற்பயிற்சி செய்வது பெரிதும் உதவும்.
தினசரி தியானம் செய்வது மனதிற்கு ஒருவித அமைதியை தருகிறது. இவை மனச்சோர்வு போன்ற மனநல பிரச்சினைகளை சரி செய்கிறது. உங்களுக்கு விருப்பம் இருந்தால் கோவிலுக்கு செல்லலாம்.
மன அழுத்தம் குறைய தூக்கம் மிகவும் முக்கியம். தினசரி சரியான தூக்கம் இல்லாத போது, உடல் ரீதியாகவும் அதிக பிரச்சனைகள் ஏற்படுகிறது. தூங்கும் போது மொபைல் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
தனியாக இருக்கும் போது அதிக மன அழுத்தம் ஏற்படும். எனவே உங்களை சுற்றி எப்போதும் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை வைத்து கொள்ளுங்கள். இவை உங்கள் பிரச்சினைகளை சமாளிக்க உதவும்.
கம்மியாக குடித்தாலும் சரி, அதிகமாக குடித்தாலும் சரி குடிப்பழக்கம் கடுமையான மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். உடலில் ஆல்கஹால் அளவு அதிகம் ஆகும் போது நரம்பியல் மற்றும் மூளையில் பாதிப்பு அதிகமாகிறது.