பிரேக்-அப்பில் இருந்து மீள..எளிமையான 6 டிப்ஸ்!
நமக்கு, யார் ஒருவர் அதிகமான மகிழ்ச்சியை தருகிறாரோ அவர்தான் நமக்கு அதிகளவில் சோகத்தையும் கொடுப்பார் என கூறப்படுகிறது. காதல் தோல்வியில் இருப்பவர்களுக்கு அவர்களின் வாழ்வே சோகமையானது போன்ற உணர்வு ஏற்படும். இது, அவர்களுக்கு எதையோ பெரிதாக இழந்தது போன்ற உணர்வு ஏற்படும். இதிலிருந்து மீள சில வழிகள் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?
காதல் தோல்விக்கு பிறகு நாம் செய்யும் மோசமான விஷயம் என்னவென்றால், அது நம் தவறு என்று நினைப்பதுதான். ஒரு காதல் தோல்விக்கு இருவருமே காரணமாக முடியும் என்பதை மனதில் நிறுத்துங்கள்.
சோகமாக இருப்பதற்கும் சோகத்தில் இருந்து மீள்வதற்கும் நேரம் காலம் இல்லை. இதிலிருந்து மீளும் முதல் படி, எது உண்மையாக உங்கள் கண் முன் இருக்கிறதோ அதை ஏற்றுக்கொள்வதுதான். அதனால், உங்கள் காதலரை அல்லது காதலியை பிரிந்து விட்டோம் என்ற நிதர்சனத்தை ஏற்றுக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
நம் வாழ்வில் அனைவருக்குமே, மிகவும் சிரமமான காலங்களில் யாராவது ஒருவர் நம்முடன் இருப்பர். அவர்கள் நண்பர்களாகவோ அல்லது குடும்பத்தினராகவோ இருக்கலாம். உங்களின் நம்பிக்கைக்குரியவரிடம் மனம் திறந்து பேசுங்கள். இதனால் ஏதோ பெரிய பாரம் மனதில் இருந்து இறங்கியது போன்று இருக்கும்.
உங்களுக்கென்று ஒரு ஹாபியை உருவாக்குங்கள், அல்லது தொலைந்து போன ஹாபியை உயிர்பித்திடுங்கள். ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு நடந்ததை நினைத்து வருந்திக்கொண்டிருந்தால் உங்கள் வாழ்வில் அடுத்த படிக்கு செல்வது கடினமாகிவிடும். எனவே, உங்களுக்கு பிடித்த செயல்களை செய்ய ஆரம்பியுங்கள்.
காதல் தோல்விக்கு பிறகு, உங்களை நீங்கள் பார்த்துக்கொள்ள தவறிவிடாதீர்கள். அது, உங்களது உடல் எடையை குறைப்பதாக இருக்கலாம். அல்லது புதிதாக உங்களுக்கு பிடித்த ஆடைகளை உடுத்துவதாக இருக்கலாம். எனவே, உங்கள் மீது நீங்கள் அதிக காதலை வளர்த்துக்கொள்ளுங்கள்.
பிரேக்-அப்பில் இருந்து முழுமையாக எழுந்து வர சில காலங்கள் எடுக்கலாம். அதுவரை, புண்பட்ட உங்களது மனதை ஆற்றுவதில் மட்டும் கவனம் செலுத்துங்கள். நீங்கள் தயார், என தோன்றிய பிறகு புதிய நபர்களை சந்திக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.