PVC ஆதார் அட்டையை வீட்டில் இருந்தே பெறலாம்... விண்ணப்பிக்கும் முறை..!!

Sun, 23 Jun 2024-9:22 pm,

பாலிவினைல் குளோரைடு அட்டைகள் PVC கார்டுகள் என்று அழைக்கப்படுகின்றன. இது ஒரு வகையான பிளாஸ்டிக் அட்டையாகும், அதில் ஆதார் அட்டை தகவல்கள் அச்சிடப்படுகின்றன.

ஆதார் பிவிசி அட்டை உங்கள் ஏடிஎம் அல்லது டெபிட் கார்டு போன்ற உங்கள் பணப்பையில் எளிதாகப் பொருந்தும். கிழிந்து போகும் என்ற என்ற கவலை இருக்காது. PVC ஆதார் அட்டையை ஆன்லைனில் ஆர்டர் செய்வதற்கான ஆன்லைன் செயல்முறையைப் அறிந்து கொள்ளலாம்.

PVC ஆதார் அட்டையை UIDAI அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ரூ.50 செலுத்தி ஆர்டர் செய்யலாம். இதற்காக நீங்கள் UIDAI இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

 

ஆதார் எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை நிரப்பி, Send OTP என்பதைக் கிளிக் செய்த பிறகு, பதிவுசெய்யப்பட்ட மொபைலில் பெறப்பட்ட OTP-ஐ கொடுக்கப்பட்ட காலி இடத்தில் நிரப்பி சமர்ப்பிக்கவும்.

இதற்குப் பிறகு, இங்கே நீங்கள் 'Order Aadhaar PVC Card' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.அதன் பிறகு நீங்கள் கட்டணம் செலுத்தன் விரும்பும் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.கிரெடிட்/டெபிட் கார்டு, நெட் பேங்கிங் மற்றும் UPI ஆகிய விருப்பங்களைப் பெறுவீர்கள்.

ஆதார் பிவிசி அட்டைக்கான நீங்கள் பணம் செலுத்தும் பக்கத்திற்கு அனுப்பப்படுவீர்கள். இங்கே நீங்கள் 50 ரூபாய் செலுத்த வேண்டும்.பணம் செலுத்திய பிறகு, உங்கள் ஆதார் PVC கார்டின் ஆர்டர் செயல்முறை நிறைவடையும்.

பிவிசி ஆதார் அட்டைக்கான செயல்முறையும் முடிந்ததும், UIDAI ஆதாரை அச்சிட்டு 5 நாட்களுக்குள் இந்திய அஞ்சல் நிறுவனத்திடம் ஒப்படைக்கும். அதன் பிறகு, தபால் துறையின் ஸ்பீட் போஸ்ட் மூலம் உங்கள் வீட்டுக்கு வந்துசேரும்.

ஆஃப்லைனிலும் புதிய கார்டை உருவாக்கலாம்: நீங்கள் அதை ஆன்லைனில் செய்ய விரும்பவில்லை என்றால், அதை ஆஃப்லைனிலும் செய்யலாம். இதற்கு நீங்கள் ஆதார் மையத்திற்கு செல்ல வேண்டும். அங்கு செல்வதன் மூலம் உங்கள் புதிய ஆதார் அட்டையை உடனடியாக பெறலாம்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link