குழந்தைகள் பொய் கூறுவதை கண்டுபிடிப்பது எப்படி? ‘இந்த’ 8 அறிகுறிகள் இருக்கான்னு பாருங்க!
குழந்தைகள் பொய் கூற ஆரம்பிக்கும் போது அவர்களின் நடத்தைகள் மாறும். திடீரென ஏற்படும் மாற்றங்களை உற்று நோக்கவும்.
அவர்களிடம் “பொய் கூறுகிறாயா?” என்று நேரடியாக கேட்காமல் அவர்களை அவர்கள் போக்கிலேயே பேச விட வேண்டும். அப்போது அவர்களுடன் கதையுடன் சேர்ந்து இன்னும் சில கதைகளும் சேரும், அப்போது அவர்கள் முதலில் பேசிய விஷயத்தை பற்றி அவர்களிடம் கேட்க வேண்டும். அது, பொய்யாக இருந்தால் அப்போது அவர்கள் நினைவில் அது இருக்கவே இருக்காது.
உங்கள் குழந்தை பொய் கூறுகிறது என்றால், அவர்கள் ஒவ்வொரு முறை அதை கூறும் போது அதில் இருக்கும் விவரங்கள் மாறிக்கொண்டே இருக்கும்.
ஒரு சில குழந்தைகள், தங்கள் பொய் உண்மை போல இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு விவரத்தையும் விட்டுவிடக்கூடாது என்ற நோக்கத்தோடு துல்லிய விவரத்தோடு பொய் கூறுவர். இப்படி ஒரு விஷயத்தை அதிகமாக விவரிப்பதற்கு பின்னாலும் பொய் அடங்கி இருக்கலாம்.
ஒரு விஷயத்திற்கு உங்கள் குழந்தை எந்த விதமான பதிலை கூறுகிறார் என்பதை பொருத்தும் பொய் கூறுதலை கண்டுபிடிக்கலாம். அவர்கள் அந்த சமயத்தில் சிரிக்கிறார்கள் என்றால் அவர்கள் கூறும் விஷயத்தில் அவர்கள் உண்மையை கூறவில்லை என்று அர்த்தம்.
நீங்கள் கேள்வி கேட்டவுடன் அவர்கள் அதற்கு எவ்வளவு வேகமாக பதில் கூறுகிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். கொஞ்சம் நேரம் கழித்து பதிலளிக்கிறார்கள் என்றால், அவர்கள் நீங்கள் கேட்க பதிலுக்கு ஒரு பொய்யை ஜோடித்து கொண்டிருக்கின்றனர் என்று அர்த்தம்.
நீங்கள் கேள்வி கேட்கும் போது அவர்கள், கோபமாக பதில் கூறுகின்றனரா, தன்னை தற்காத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் பதில் கூறுகின்றனரா என்பதை பார்க்க வேண்டும்.
அவர்களின் உடல் மொழியை கவனிக்க வேண்டும். உங்களோடு கண்ணோடு கண் பார்க்கவில்லை, கையை பிசைந்து கொண்டிருக்கிறார், கைகளை கட்டிக்கொண்டிருக்கிறார் என்றால் அவர் கூறுவது பொய்யாக இருக்க வாய்ப்புள்ளது.