தண்ணீரில் நனைந்த போனை சரிசெய்வது எப்படி?
மழைக்காலங்களில் உங்கள் மொபைல் போன் மழையில் நனைய வாய்ப்புகள் இருக்கிறது. இதனால், விலையுயர்ந்த போன்களைக் கூட முழுமையாக இழக்கும் அபாயம் இருக்கிறது. அப்படியான சூழலில் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
ஸ்மார்ட்ஃபோனுக்குள் கொஞ்சம் தண்ணீர் சென்றால், அதை ஏர் கண்டிஷனர் அறையில் சிறிது நேரம் விட்டுவிடலாம். ஏசி அறையின் ஈரப்பதத்தை இழுத்து, ஸ்மார்ட்போனுக்குள் சென்ற தண்ணீர் வெளியேற்றும்
தண்ணீருக்குள் ஸ்மார்ட்போன் விழுந்துவிட்டால் அரிசி நிரம்பிய ஒரு ஜாடியில் சுமார் ஒரு நாள் வைத்திருக்க வேண்டும்
சவுண்ட் எழுப்பும் செயலியை உங்கள் ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்யுங்கள். இந்த செயலி ஆன் செய்தால் எழும்பும் சத்தம் மூலம் ஸ்பீக்கருக்குள் சென்ற நீர் தானாகவே வெளியேறும். பெரும்பாலான மக்களுக்கு இந்த முறை பற்றி தெரியாது.
ஜிப் லாக் கவர் மூலம் ஸ்மார்ட்போனை தண்ணீரில் இருந்து பாதுகாக்கலாம்.ஸ்பெஷல் லேமினேஷன் மூலமாகவும் வாட்டர் புரூப் வைத்துக்கொள்ளலாம்.
மழைநீரில் இருந்து ஸ்மார்ட்போனை பாதுகாக்கும் கண்ணாடி கவர்கள் தற்போது சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ளன. சிலிகான் கவர்கள் ஸ்மார்ட்போனை தண்ணீரிலிருந்து பாதுகாக்கும்