தொப்பை கொழுப்பை கரைக்க, உடல் எடையை குறைக்க ஓம நீர் ஒன்று போதும்: இப்படி குடிங்க!!
உடல் எடையை குறைக்க பலர் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். சிலர் ஜிம் செல்கிறார்கள், சிலர் உணவு கட்டுப்படுகளை மெற்கொள்கிறார்கள். எனினும் சில எளிய இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம்.
உடல் எடையை குறைக்க ஓமம் ஒரு சிறந்த தீர்வாக கருதப்படுகின்றது. இது ஆயுர்வேத மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. ஓம நீர் மூலம் தொப்பையில் உள்ள கொழுப்பு மற்றும் இடுப்பில் உள்ள கொழுப்பை மிக எளிதாக குறைக்கலாம் என இந்தியாவின் பிரபல டயட்டீஷியன் டாக்டர் ஆயுஷி யாதவ் கூறுகிறார். உடல் எடையை குறைக்க ஓம நீரை பயன்படுத்தும் முறைகளை பற்றி இங்கே காணலாம்.
தினமும் காலையில் எதையும் சாப்பிடாமல் வெறும் வயிற்றில் ஓம தண்ணீரைக் குடித்து வந்தால், அது விரைவில் உடல் எடையைக் குறைக்க உதவுவதோடு, தொப்பையையும் குறைக்கும்.
ஓம நீரை சிறிது சூடாக்கிய பிறகு குடிப்பதால் கலோரிகள் வேகமாக குறைக்கலாம். நல்ல பலன்கள் வேண்டுமானால் உங்கள் தினசரி உணவில் ஓமத்தின் அளவை அதிகரிக்கவும்.
உடல் எடையை குறைக்க, 25 கிராம் ஓமத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும். மறுநாள் காலை வெறும் வயிற்றில் இந்த நீரை உட்கொள்ளவும்.
இந்த வகையில் ஓம நீரை ஒரு மாதம் குடித்து வந்தால், உங்கள் உடலில் ஏற்படும் வித்தியாசத்தை உங்களால் அறிய முடியும். உடல் எடை சீராக குறையத் தொடங்கும்.
இரவில் ஓமத்தை தண்ணீரில் ஊறவைக்க மறந்துவிட்டால், காலையில், ஒரு ஸ்பூன் ஓமத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து ஒரு பாத்திரத்தில் கொதிக்க வைக்கவும். அதில் 5-6 துளசி இலைகளை சேர்த்து கொதிக்க வைக்கவும். நீர் நன்றாக கொதித்தவுடன், சற்று குளிர்ந்தவுடன் வெதுவெதுப்பான ஓம நீரை குடிக்கவும்.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.