மருந்தில்லாமல் இயற்கையாக கொலஸ்ட்ராலை குறைப்பது எப்படி?
ஒழுங்கான டயட்டை பின்பற்றுவது அவசியமானது, தினசரி உங்களது உணவில் நார்சத்து, நல்ல கொழுப்புகள் இடம்பெறுவதை கவனித்து கொள்ளுங்கள்.
எண்ணெயில் அதிகம் வறுத்த பொறித்த மற்றும் அதிகம் சர்க்கரை நிறைந்த உணவுகள் உங்கள் உடலில் கெட்ட கொழுப்பின் அளவை அதிகரித்துவிடும்.
அதிகளவிலான உடலுழைப்பு கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த சிறந்த வழி, உடற்பயிற்சி செய்வது, நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமராமல் ஏதேனும் சுறுசுறுப்பாக வேலை செய்வதன் மூலமும் கொலஸ்ட்ராலை குறைக்கலாம்.
மன அழுத்தத்தின் காரணமாகவும் ஒருவரது உடலில் கொலஸ்ட்ராலின் அளவு உயரும். கொலஸ்ட்ராலை குறைக்க நினைப்பவர்கள் மன அழுத்தம், பதட்டமின்றி இருப்பது அவசியமானதாகும்.
புகைப்பிடிப்பது மற்றும் மது அருந்துவது பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு வழிவகுக்கும் அதிலும் குறிப்பாக இது உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கிறது. புகைபிடிப்பது மற்றும் மது அருந்துவதை நிறுத்தினால் கொலஸ்ட்ராலை குறைக்கலாம்.